ஆதரவற்றோரின் கேசத்தை கோதி பாசத்தை பொழிந்த அன்னை தெரஸா... 110-வது பிறந்தநாள் இன்று..!
சென்னை: அன்னை தெரஸா ஒரு முறை சென்னை வந்த போது இங்குள்ள குடிசைப் பகுதிகளுக்கு சென்று அங்கு வாழும் மக்களை சந்தித்து உரையாடியிருக்கிறார்.
வாழ்நாள் முழுவதும் பிறர் நலம் நாடியே மறைந்த அன்னை தெரஸாவின் 110 -வது பிறந்தநாளான இன்று, அவரது சென்னை வருகை குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் நூருல்லா.

சென்னை வருகை
''அன்னை தெரசா சென்னை வருகையின் போது குடிசைப் பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தத் திட்டமிட்டிருந்தார். எனவே அப்போதைய குடிசை மாற்று வாரியத் தலைவர் சுலோச்சனா சம்பத்தைத் தமிழக அரசு ஏற்பாடு செய்து அழைத்துச் செல்ல வழிவகை அமைத்துக் கொடுத்தது.
அதன்படி சென்னையில் அன்னை தெரசாவை முன்நின்று ஏற்றுக்கொண்ட சுலோச்சனா சம்பத், ஒரு நாள் முழுக்கச் சுற்றுப் பயண நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்திருந்தார்''.

எனக்கு அழைப்பு
''ஈவிகே சம்பத் காலத்திலிருந்தே அவரது இல்லத்திற்குச் சென்று வந்த வகையில் சுலோச்சனா சம்பத் அம்மையாரோடு எனக்கு நெருக்கமான நேசம் நீடித்து வந்தது. அவர் குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்தபோதும் அது தொடர்ந்தது. சுலோச்சனா சம்பத்துடனான என் பாசபூர்வமானப் பற்றுப் பக்குவமாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் ஒரு கட்டமாகத் தான் சுலோச்சனா சம்பத் அழைப்பு விடுத்தார். நான் நேரில் சென்று பேசினேன்''.

நானும் சென்றேன்
"அன்னை தெரசாவின் சென்னைப் பயணத்தின் பொறுப்பாளர் பொறுப்பைத் தமிழக முதல்வர் எனக்கு வழங்கி இருக்கிறார்." என்று என்னிடம் தெரிவித்தார். அன்னை தெரசாவுடன் அவர் பயணிக்கும் போது நானும் செய்தியாளனாகப் பங்கேற்க அனுமதி வேண்டினேன். வாய்ப்பை அவர் மனப்பூர்வமாக வழங்கிப் பெருமைச் சேர்த்தார். ஆசிரியரிடம் இதைப் பற்றிக் குறிப்பிட்டேன். அவர் உவகையுணர்வோடு அனுமதித்து, புகைப்படக் கலைஞரையும் உடன் அனுப்பி வைத்தார்''.

சுற்றுப்பயணம்
''அதன்படி, அன்னை தெரசாவுடன் சுலோச்சனா சம்பத் நிகழ்ச்சிகளில் அடியேனும் பங்கேற்றேன். மந்தைவெளிபாக்கம் பகுதியில் பஸ் நிலையத்தில் இருந்து பட்டினப் பாக்கம் போகும் சாலையில் உள்ள குடிசைப் பகுதிக்குச் செல்வது எனத் திட்டமிடப்பட்டது. அன்னை தெரசாவின் சேவா நிறுவனத்துச் சென்னைக் கிளைப் பொறுப்பாளர்களுடன் கலந்து பேசித்தான் அன்னை தெரசாவின் சுற்றுப்பயணம் நிகழ்ச்சிகள் தீர்மானிக்கப்பட்டன''.

நோஞ்சான் குழந்தைகள்
''குடிசைப் பகுதிக்குள் சென்று அங்கிருந்த ஏழை எளியோரின் குடிசைகளுக்குள் அன்னை தெரசா நுழைந்தார். வியாதியில் கிடந்தக் குழந்தைகளையும், நொடிந்து போன நோஞ்சான் பிள்ளைகளையும் அவர் மடியில் தூக்கி வைத்துக் கொண்டுக் கேசத்தைக் கோதிப் பாசத்தைப் பொழிந்தார். அருகில் இருந்தோர் கன்னத்தில் வழிந்த கண்ணீரோடு அன்னையை வணங்கினர்''.

ஆசிர்வதித்தார்
''அதன் பின்னர் தி நகரில் தெற்கு போக் ரோடு பகுதியில் வெங்கட் நாராயணா சாலைச் சந்திப்பு அருகே அமுதம் காலனிக்குச் சென்றோம். ஒரு சிறு அறை தான். அன்னை தெரசாவின் சேவை அமைப்பின் ஒரு கிளை அலுவலகம் அதில் இருந்தது.அமர்ந்து அன்னை தெரசா ஜெபம் செய்தார். அமைப்பின் பொறுப்பாளர்களுடன் உரையாடினார். அந்தக் குடியிருப்பில் இருந்த பொதுமக்களிடையே நேசம் பேசினார்.அப்போது அடியேன் நெற்றியில் தன் அருட்கரத்தைப் பதித்து ஆசீர்வாதம் செய்தார்.
இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். அந்த காலகட்டத்தில் அன்னை தெரசாவுடன் சுற்றுப் பயணம் நிகழ்த்திய அந்த நினைவுகள் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. மனம் விம்மித் தாழ்கிறது. நெற்றி நிமிர்கிறது''.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications