சென்னை பனகல் பார்க் பகுதி.. இன்று முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. வாகன ஒட்டிகளே அலர்ட்
சென்னை: மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் காரணமாக சென்னை பனகல் பகுதியில் இன்று முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பீக் நேரங்களில் வாகன நெரிசல் மிகவும் அதிகம் காணப்படும் இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால், வாகன ஓட்டிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்யுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தலைநகரில் காணப்படும் இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் மெட்ரோ ரயில்கள் பயணிகளுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

டிராபிக் நெரிசலில் மாட்டிக்கொள்ளாமல் எளிதாகவும் விரைவாகவும் நினைத்த இடத்திற்கு செல்ல முடியும் என்பதால் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மெட்ரோ திட்ட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையை பொறுத்தவரை 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.
சென்ட்ரலில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் மாதவரம் - சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மெட்ரோ பணிகளுக்காக பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை பனகல் பகுதியில் இன்று முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. மெட்ரோ கட்டுமான பணிக்காக இன்று முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை போக்குவரத்து போலீசார் இது தொடர்பாக கூறியதாவது:-
பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு, வெளியேறும் அமைப்புக்குண்டான கட்டுமான பணிகள் வெங்கடநாராயண சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜேஒய்எம் கல்யாண மண்டபம் அருகில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் வருகின்ற. இன்று முதல் 1 ஆம் தேதி வரை 7 நாட்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.
* வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கடநாராயண சாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளன. * மாறாக, அவர்கள் நேராக தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாகச் சென்று வெங்கடநாராயண சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.
* உள்ளூர் மக்களின் வசதிக்காக, வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் வரை இரு திசைகளிலும் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை பனகல் பார்க் பகுதி சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். பீக் நேரங்களில் வாகன நெரிசல் மிகவும் அதிகம் காணப்படும் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்வது நல்லது. இல்லையென்றால் டிராபிக் நெரிசலில் சிக்கி கூடுதல் நேர விரயம் ஏற்படும் நிலை ஏற்படலாம் என்று வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications