பீச் ஸ்டேஷனுக்கே வரும் மெட்ரோ.. சென்னை பயணிகளுக்கு ஜாக்பாட்.. அடியோடு மாறுது வேளச்சேரி ரூட்
சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் வழித்தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் பணி அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, இந்த ரூட் முற்றிலும் மாறிவிடும். அதாவது சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடம் மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்பு இவ்வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் பயணிகளின் தேவையை தீர்த்து வைப்பதில் பெரிதும் பங்களிப்பது புறநகர் மின்சார ரயில்கள்தான். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி உள்ளிட்ட ரூட்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையில் இயக்கப்படும் வழித்தடம் என்பது பறக்கும் ரயில் சேவையாக இயக்கப்படுகிறது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடம்
இந்த வழித்தடத்தில் ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ளதால், சென்னையின் மிக முக்கியமான வழித்தட சேவையாக இது உள்ளது. காலையிலும் மாலையிலும் பயணிகள் கூட்டம் இந்த ரயில்களில் அலைமோதுவதை பார்க்க முடியும். சென்னையில் கடற்கரை - வேளச்சேரி இடையில் 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 18 ரயில் நிலையங்கள் உள்ளன.
தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரூட் கடந்த 1997-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தை வேளச்சேரி - பரங்கிமலை வரையில் விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரொ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பராமரிப்பு செலவு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து
இதற்கான ஒப்புதலையும் கடந்த மாதம் 31 ஆம் தேதி ரயில்வே வாரியம் அளித்தது. இதனால், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பறக்கும் ரயில் சேவையின் வழித்தடம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். தற்போது மெட்ரோ ரயில்களை பொறுத்தவரை சென்னையின் மிகவும் ஹை டெக் பயண வழித்தடமாக இருக்கிறது.
ஆனால், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் அப்படி இல்லை. எனவே, மெட்ரோ ரயில் நிர்வாகம் வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், ரயில் நிலைய கட்டமைப்புகள், வசதிகள் அனைத்து மாறிவிடும். இதனால் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்பதால் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மெட்ரோ ரயில்வேயின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
2028 ஆம் ஆண்டு முதல்
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் வழித்தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் பணி அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, இந்த ரூட் முற்றிலும் மாறிவிடும். மெட்ரோ ரயில்களில் உள்ள கட்டமைப்புகள் அனைத்தும் பறக்கும் ரயில் சேவைக்கு வந்துவிடும்.
அதாவது, மெட்ரோ ரயில் நிலையங்களில் எந்த அளவு பாதுகாப்பு வசதி உள்கட்டமைப்பு வசதி இருக்கிறதோ அதேபோன்று மாற்றப்படும். இந்த ரூட் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பறக்கும் ரயில்கள் இயக்கப்படும். கட்டமைப்புகள் மாற்றப்பட்ட மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு முதல் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது
எனவே, மெட்ரோ ரயில்களில் நடைமேடை உயர்த்தப்படும் தானியங்கி கதவுகள் உள்ளிட்டவை அமைக்கப்படும்" என்றார். வேளச்சேரியில் உள்ள புறநகர் ரயில் பராமரிப்புக்கான பணிமனை மெட்ரோ ரயில்களை பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றப்பட உள்ளது என்றும் கூறினார்.
இதன் மூலம் இனி சென்னை கடற்கரை ரூட்டில் இருந்தே மெட்ரோ ரயில்கள் ஓடத்தொடங்குவது 2028 க்கும் பின் சாத்தியம் எனத்தெரிகிறது. அதேவேளையில், இந்த ரூட்டில் தற்போது புறநகர் மின்சார ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் இதை கையில் எடுத்தால் கட்டணம் உயரும் என்பதால் பயணிகள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications