அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது -எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை..!
சென்னை: உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது.
Recommended Video

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு 15 நாட்களாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை தொய்வடைந்தததை அடுத்து ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இருந்து எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைகள் தொடர்கின்றன. மூத்த மருத்துவர்கள் குழு அமைச்சர் காமராஜ் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோர் நேற்றிரவு 10 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.
இதனிடையே இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ள எம்.ஜி.எம். மருத்துவமனை, அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் தென்படுவதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது திருவாரூர் மாவட்ட அதிமுகவினர் மற்றும் சக அமைச்சர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. நேற்றிரவு முதல அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து பதைபதைப்பில் இருந்து வந்த அவர்களுக்கு மருத்துவமனை அறிக்கை தெளிவை கொடுத்துள்ளது.
அமைச்சர் காமராஜுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவரை அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் உடனிருந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications