தனியார் பால் பாக்கெட்கள் விலை உயர்வு! தமிழக அரசை தலையிடக் கோரும் ஜவாஹிருல்லா!
சென்னை: தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் சில பால் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாயிலிருந்து நான்கு ரூபாய் வரை உயர்த்தியிருப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இதில் தலையிட்டு பால் விற்பனை விலையை வரன்முறை செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பால் விலை
தமிழகத்தின் சிறு தனியார் பால் நிறுவனங்கள் சில நாட்களுக்கு முன்பு தங்களது விற்பனை விலையை உயர்த்தின. தற்போது திருமலா, ஹெரிடேஜ், ஜெர்சி, டோட்லா உள்ளிட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பால் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாயிலிருந்து நான்கு ரூபாய் வரை உயர்த்தியுள்ளன.

விலை உயர்வு
கொரோனா பெருந் தொற்று காரணமாகத் தமிழகத்தில் ஊரடங்கு நிலவிவந்த சூழ்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உற்பத்தியாளர்களிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை விலையை குறைக்காமல் விற்று வந்ததாகத் தெரிகிறது. தற்போது கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொருந்தாத காரணத்தைக் கூறி பால் விற்பனை விலையை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

மக்களுக்கு நிதிச்சுமை
தமிழகத்தின் தினசரி பால் தேவையில் 16 சதவீதத்தை மட்டுமே அரசின் நிறுவனமான ஆவின் பால் பூர்த்தி செய்கிறது. மீதமுள்ள 84 சதவீத தேவையைத் தனியார் பால் நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்கின்றன. இன்னிலையில் தனியார் நிறுவனங்களின் விற்பனை விலை உயர்த்தப்பட்டு இருப்பது தமிழ்நாட்டு மக்களின் நிதிச்சுமையை அதிகரிக்கச்செய்யும்.

அரசு தலையிட வேண்டும்
எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை விலையை வரன்முறை செய்து பால் உற்பத்தியாளர்களையும் நுகர்வோர்களையும் பாதுகாக்க வேண்டுமாய் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications