ஆஹா! ஆவின் பச்சை பால் நிறுத்தும் நேரத்தில் விலை குறைந்த ‘ஆரோக்யா’.. அலாரம் அடிக்கும் பால் முகவர்கள்!
சென்னை: ஹட்சன் நிறுவனத்தின் நிலைப்படுத்தப்பட்ட 4.5% கொழுப்பு சத்துள்ள பால் மற்றும் தயிர் விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டால் வேறு வழியின்றி பொதுமக்கள் தனியாருக்கு செல்வார்கள் என பால் முகவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மற்ற முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தின் பாலில் கொழுப்பு அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில நாட்ககளுக்கு முன்னர் குற்றம் சாட்டினார். மேலும், இதுகுறித்த ஆய்வறிக்கை என்றும் ஒரு பதிவை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து ஆவின் பால் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இது குறித்து பதில் அளித்து இருந்தார்.
இந்நிலையில், ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் (4.5% கொழுப்பு சத்து உள்ள நிலைப்படுத்தப்பட்ட பால்) விநியோகம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மொத்த பால் விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் விற்பனை 40 சதவீதம். 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாகவும் இது உள்ளது. வருவாய் இழப்பால் இந்த பால் பாக்கெட் விற்பனையை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக, 3.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட 'டிலைட்' ஊதா நிற பால் பாக்கெட் (சமன்படுத்தப்பட்ட பால்) விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்யா பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் பால் பாக்கெட்களில் ஆரோக்யாவும் முதன்மையானது. ஆவின் பால் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் சூழலில், ஆரோக்யா பால் விலை குறைக்கப்பட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் தனியார் பாலை நோக்கிச் செல்வார்கள் என பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "4.5% கொழுப்பு சத்துள்ள ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) உற்பத்தி மற்றும் விற்பனையை நவம்பர் 25ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக 3.5% கொழுப்பு சத்துள்ள ஆவின் டிலைட் பாலினை அதே விற்பனை விலைக்கு விநியோகம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான (ஆரோக்யா) ஹட்சன் 25.11.2023 முதல் 4.5% கொழுப்பு கொழுப்பு சத்துள்ள அவ்வகை பாலுக்கு லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் ஒரு கிலோவுக்கு 8 ரூபாயும் விற்பனை விலையை குறைப்பதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் பாலுக்கான கொள்முதல் விலை கணிசமாக குறைந்துள்ளதாகவும், அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் இந்த விற்பனை விலை குறைப்பை அமல்படுத்த இருப்பதாகவும் வருகின்ற தகவலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்கிறது. அதே சமயம் இந்த தருணத்தில் தமிழகத்தில் பால் உற்பத்தி குறைந்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தவறான தகவலை தெரிவித்து வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சுட்டிக் காட்ட விரும்புகிறது.
மேலும் ஹட்சன் நிறுவனத்தின் நிலைப்படுத்தப்பட்ட 4.5% கொழுப்பு சத்துள்ள பால் மற்றும் தயிர் விற்பனை விலை குறைப்பை தொடர்ந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மற்ற முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி, விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டால் வேறு வழியின்றி பொதுமக்கள் தனியாருக்கு செல்ல இது ஏதுவாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications