ஆல் இஸ் வெல்.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அன்பில் மகேஷ்
சென்னை: தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அன்பில் மகேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் அன்பில் மகேஷ். இவர் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பணிகளில் மாவட்ட வாரியாக அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், அன்பில் மகேஷ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது, காஞ்சிபுரம், வாலஜாபாத், உத்தரிமேரூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதோடு ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். ஆய்வுகளை முடித்த பின்னர் அன்பில் மகேஷ் காரில் சென்னை நோக்கி திரும்பினார். இந்நிலையில், அன்பில் மகேஷுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்பில் மகேஷ் உணவு சாப்பிட்டபோது திடீரென்று ஒவ்வாமை ஏற்பட்டு, ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து, அமைச்சரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் அமைச்சருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அங்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, மருத்துவ சிகிச்சையில் உள்ள அன்பில் மகேஷ் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல் நிலை பூரண குணமடைந்ததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications