கொரோனா பரவலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னது என்ன?
சென்னை : தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் திறப்பு தேதியில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பள்ளிகள் திறப்பு தேதியில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை. 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
அதேபோல, 12-ஆம் வகுப்பிற்கு ஜூன் 20-ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பிற்கு ஜூன் 27-ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கும். இதுவரை எந்த மாற்றமும் இல்லை. பொதுவாக மாற்றங்கள் எதுவும் வருகிறது, ஊரடங்கு வருகிறது, மாஸ்க் கட்டாயம் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டால் முதல்வர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். முதல்வர் தான் மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து இதுதொடர்பான முடிவை எடுப்பார். முதல்வரின் உத்தரவை பின்பற்றுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications