சொன்ன மாதிரியே.. சின்னதுரை உயர்கல்விக்கு எல்லா வகையிலும் துணைநிற்பேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
சென்னை: நாங்குநேரி மாணவன் சின்னதுரை பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து, தான் முன்பே உறுதியளித்தபடி, அவர் விரும்பும் கல்லூரியில் சேர்ந்து படிக்கவும், உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தி உள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
நெல்லை மாவட்டம் , நாங்குநேரி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளின் மகன் சின்னதுரை, அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பிளஸ் 2 படிக்கும்போது கடந்த ஆகஸ்ட் மாதம், பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள், மாணவன் சின்னதுரையை சாதி ரீதியாக இழிவுபடுத்தி, தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து மாணவர் சின்னதுரை ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோரிடம் தொடர்பு கொண்டு பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற மாணவன் சின்னதுரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பள்ளியில் தன்னை சிலர் அடிப்பதாக கூறினார் சின்னதுரை.
இதையடுத்து, ஆசிரியரிடம் எங்களை எப்படி நீ காட்டிக்கொடுக்கலாம் எனக் கேட்டு அந்த மாணவர்கள் சின்னதுரையிடம் மிரட்டியுள்ளனர். மேலும் இரவு நேரத்தில், 6 பேர் கொண்ட கும்பல், மாணவன் சின்னதுரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த சின்னதுரையின் தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதனையடுத்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த கொடூர அரிவாள் வெட்டு சம்பவத்தால் அதிர்ச்சியால் சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
பள்ளி மாணவர்கள் இடையே சாதி பிரச்சனையால் ஏற்பட்ட மோதல் கொடூரமான தாக்குதல் வரை சென்றது தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இச்சம்பவம் தொடர்பாக வேதனை தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டார். சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
"பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை, அவரது தங்கை ஆகிய இருவரையும் பாதுகாப்பான வகையில் நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்த்து படிக்க வைப்பேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இது என் கடமை. நான் எப்படி உங்களை தம்பியாக, தங்கையாக பார்க்கிறேனோ, மாணவர்களே நீங்கள் எல்லோரும் சக மாணவர்களை சகோதரர்களாக பாருங்கள். ஒரு அமைச்சராக அல்ல, உங்கள் அண்ணனாகச் சொல்கிறேன். மாணவர்களே அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள். இனியும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கவே கூடாது." எனக் கூறி இருந்தார் அன்பில் மகேஷ்.
இந்நிலையில், கைகள் வெட்டப்பட்டு தேர்வு எழுத முடியாமல் சிரமப்பட்டு வந்த சின்னத்திரை பிறர் உதவியோடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுதினார். இந்த நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் உதவியாளர் துணையுடன் தேர்வு எழுதினார். இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் சின்னதுரை. இந்நிலையில், தான் முன்பே உறுதி அளித்தபடி, சின்னதுரையின் உயர்கல்விக்கு துணை நிற்பேன் எனக் கூறியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இதுதொடர்பாக இன்று எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "நாங்குநேரியில் சாதியக் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன்.
"கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் - மு.க" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications