அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார்... அவருக்கு வயது 72... பலனளிக்காத சிகிச்சை..!
சென்னை: வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
கடந்த 13-ம் தேதியன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே சென்றுகொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக அக்டோபர் 14-ம் தேதியன்று சென்னை அழைத்துவரப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு காலமாகிவிட்டார்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணம் அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதனிடையே காவேரி மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில் அமைச்சர் துரைக்கண்ணு மிக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறியிருந்தது. மேலும், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவேரி மருத்துவமனைக்கு கடந்த வாரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனை இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் துரைக்கண்ணுவின் குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு சென்றிருந்தார். இதனிடையே அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் குழு எவ்வளவோ போராடியும் முடியவில்லை.

சென்னையில் இருந்து சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் கொண்டு செல்லப்படுமா அல்லது கொரோனா கால சுகாதாரத்துறை விதிகளின் படி சென்னையிலேயே உடல் அடக்கம் செய்யப்படுமா என்ற விவரம் வெளியாகவில்லை.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்











Click it and Unblock the Notifications