உங்க ஆதங்கம் புரியுது! எனக்கும் செய்து கொடுக்கனும்னு தான் ஆசை! ஆனால் இது தான் பிரச்சனை -துரைமுருகன்
சென்னை: சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் தோனிமடுவு திட்டத்தை செயல்படுத்த தனக்கும் ஆசையாக தான் இருக்கிறது என்றும் ஆனால் சி.எல்.ஏ.அறிக்கைபடி அங்கு புதிய அணை கட்ட வாய்ப்பே இல்லை எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் சட்டசபையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் இதனைக் கூறினார்.
மேலும், ஒரு செக் டேமாவது கட்ட முடியுமா என அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

பாமக எம்.எல்.ஏ.
மேட்டூர் தொகுதியில் தோனிமடுவு திட்டத்தை செயல்படுத்தினால் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் நீராதாரம் பெற்று பயன்பெறும் என்றும் இதனால் மூத்த அமைச்சரான நீங்கள் இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளிக்க எழுந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எடுத்த எடுப்பிலேயே எனக்கு மட்டும் தோனிமடுவு திட்டத்தை செய்துகொடுக்க கூடாதென்றா விருப்பம், எனக்கு அதை செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது என்றார்.

சி.எல்.ஏ. அறிக்கை
ஆனால் வழக்கமாக நான் கூறுவது போல் சி.எல்.ஏ. அறிக்கையில் தோனிமடுவு திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ள தகவலை வெளியிட்ட அவர், இந்த திட்டத்திற்காக ஒரு ரூபாய் செலவு செய்தால் 7 பைசா மட்டுமே திரும்பி வரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், உறுப்பினர் சதாசிவம் கூறும் இடம் வனத்துறைக்கு சொந்தமானது எனவும் காரணத்தை விளக்கினார் அமைச்சர் துரைமுருகன்.

வனத்துறை நிலம்
வனத்துறைக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தினால் பதிலுக்கு நாங்கள் 400 ஏக்கர் நிலங்கள் கொடுத்தாக வேண்டும் அதுமட்டுமல்லாமல் இன்றைய திட்ட மதிப்பின் படி 300 கோடி ரூபாய்க்கும் மேலாக அதற்கு செலவிட வேண்டிய நிலை உள்ளதாகவு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். புதிய அணை கட்டக்கூடிய அளவுக்கு அங்கு ஒன்று பெரிதாக தண்ணீர் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தோனிமடுவு திட்டம்
இருப்பினும் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் கோரிக்கை குறித்து பரிசீலித்து, அவர் கூறும் இடத்தில் ஒரு ஒரு செக் டேமாவது கட்ட முடியுமா என அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்தார். தோனிமடுவு திட்டத்தை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ள ஒரு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications