100 முறை பார்த்தீங்களே ஒரு முறையாவது சொன்னீங்களா? ஜூனியர் எம்.எல்.ஏ.வை கலாய்த்த துரைமுருகன்!
சென்னை: திமுக ஜூனியர் எம்.எல்.ஏ.வான ஈ.ராஜாவை மூத்த அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் கலாய்த்த நிகழ்வு உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அமைச்சர் துரைமுருகன் தனக்கே உரிய பாணியில் தக் லைஃப் பதில் கொடுத்து சபையை கலகலப்பாக வைத்துக் கொண்டார்.
நேற்று போர்க்களமாக காட்சியளித்த தமிழக சட்டசபை இன்று அமைதியான முறையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஈ.ராஜா, குருவிக்குளம் யூனியன் ஆலமநாயக்கன்பட்டி கிராமத்தில் குளத்தின் தடுப்புச் சுவர் உடைந்து தண்ணீர் வீணாவதாகவும் மணம் மூட்டைகளை கொண்டு கரை அமைக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை எனவும் கூறினார். மேலும், கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியால் குளத்தில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டதாக தெரிவித்தார்.

100 முறை பார்த்தார்
கடந்தாண்டு பெய்த கனமழையால் குளத்தின் தடுப்புச் சுவர் உடைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை சரி செய்து கொடுக்க முடியுமா என பேரவை தலைவர் வாயிலாக அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறிவிட்டு அமர்ந்தார் ஈ.ராஜா. அதற்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் துரைமுருகன் தக் லைஃப் பதில் கொடுத்து கவனம் ஈர்த்தார். ''சட்டமன்ற உறுப்பினர் 100 முறையாவது என்னை பார்த்திருப்பார், ஆனால் ஒரு முறை கூட இதைப்பற்றி சொல்லவில்லை.''

கலாய்த்த துரைமுருகன்
''என்னிடம் இது பற்றி சொல்லியிருந்தால் அப்போதே உடனடியாக உத்தரவிட்டு தண்ணீர் வீணாவதை தடுத்திருப்பேன்'' எனத் தெரிவித்தார். இதன் மூலம் ஜூனியர் எம்.எல்.ஏ.வான ஈ.ராஜாவை துரைமுருகன் கலாய்த்ததோடு மட்டுமல்லாமல், கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட வேண்டிய அளவுக்கு இது பெரிய பிரச்சனை இல்லை என்பதையும் இது போன்ற சிறிய கோரிக்கைகளை எல்லாம் தன்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினாலே அதை செய்து கொடுத்துவிடுவேன் எனவும் எல்லா உறுப்பினர்களுக்கும் சூசகமாக பாடம் எடுத்திருக்கிறார்.

பேரவையில் சிரிப்பு
சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா கேள்விக்கு ஒரே வரியில் நச்சென்று பதிலளித்ததோடு, ஒரு வருடமாக இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்பதையும் பேரவையில் வைத்தே உறுப்பினருக்கு மறைமுகமாக பதில் கேள்வி எழுப்பி தனது சாதுர்யத்தை வெளிப்படுத்தினார் அமைச்சர் துரைமுருகன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications