ஹான்.. ஹான்.. என்னது? அப்படியே ஸ்டன் ஆகி நின்ற துரைமுருகன்.. குறுக்கே புகுந்த அப்பாவு! என்ன நடந்தது?
சென்னை: இன்று தமிழ்நாடு சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் ஸ்டன் ஆகி நின்ற சம்பவம் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தற்போது நடந்து வருகிறது. மே 10 வரை நடக்க உள்ள இந்த அமர்வில் பல்வேறு கூட்டங்கள், ஆலோசனைகள் நடக்கின்றன. பல முக்கிய தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று நடந்த விவாதத்தில் பாமக எம்எல்ஏ ஜிகே மணி, மண் பாண்டம், செங்கல் செய்ய மண் எடுப்பது குறித்த கேள்வியை எழுப்பினார்.

துரைமுருகன்
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூலை பணியாளர்களுக்கு மண் தேவை என்பதை ஆட்சிக்கு வரும் முன்பே நாங்கள் தெரிவித்தோம்.அப்போது நீங்கள் அந்த சட்டத்தில் சட்ட திருத்தம் செய்துவிட்டு அரசாணை வெளியிடவில்லை. நாங்கள் அதை அரசாணையில் வெளியிட்டோம் . முன்பு மண் எடுக்க சுற்றுசூழல் அனுமதி தேவை என்று இருந்தது. இப்போது அந்த அனுமதி தேவை இல்லை.

என்ன சொன்னார்?
இப்போது எல்லா விதிகளையும் மாற்றி இருக்கிறோம். எளிமையாக செயல்படும் வகையில் இதில் விதிகளை மாற்றி இருக்கிறோம். இதை பற்றி இரவு 12 மணிக்கு இதை இயக்குனர்களுடன் பேசி இருக்கிறேன். ஆனாலும் சில இடங்களில் மண் எடுப்பதில் பிரச்சனை இருக்கிறது. இன்னும் இரண்டொரு நாளில் பிரச்சனை சரியாகிவிடும். நீங்களே என்னிடம் நன்றி சொல்லி விடுவீர்கள் என்று துரைமுருகன் பதில் அளித்தார்.

ஸ்டன் ஆனார்
இந்த நிலையில் சட்டசபையில் அதன்பின் மீண்டும் பாமக எம்எல்ஏ ஜிகே மணி இதில் கேள்வி எழுப்பினார். இன்னும் சில எம்எல்ஏக்களும் எழுந்து கேள்வி கேட்டனர். ஆனால் இவர்கள் பேசியதை கேட்க முடியாமல் அப்படியே துரைமுருகன் சில நொடிகள் ஸ்டன் ஆகி நின்றார். ஹான்.. ஹான்.. ஹான் என்று கேட்டபடி ஸ்டன் ஆகி நின்றார். யார் என்ன கேட்கிறார்கள் என்று புரியாமல் அவர் குழம்பியபடி இருந்தார்.

அமைச்சர் பதில் சொல்லுங்கள்
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அவரிடம் அமைச்சர் அவர்களே பதில் சொல்லுங்கள் என்று குறிப்பிட்டார். மண் எடுப்பது பற்றி விளக்கும்படி அப்பாவு துரைமுருகனிடம் கூறினார். இதை தொடர்ந்தே என்ன நடக்கிறது என்று புரியாமல் ஸ்டன் ஆகி நின்ற துரைமுருகன் மீண்டும் பதில் அளித்தார். பொதுவாக சட்டசபையில் துரைமுருகன் இருந்தாலே கலகலப்பாக இருக்கும். எதிர்கட்சியினரும் இவரின் பேச்சை ரசிப்பார்கள் இன்று துரைமுருகன் அப்படியே நடந்து கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications