சாலையோர வசதி மையம்! பள்ளங்களற்ற சாலை! டிராவல் விரும்பிகளுக்காக அமைச்சர் எவ வேலு அசத்தல் அறிவிப்பு!
சென்னை: சாலைகளில் உள்ள பள்ளங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணிநேரத்திலும், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளில் 72 மணிநேரத்திலும் சரி செய்யப்படும் என அமைச்சர் எவ வேலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ஓட்டுநர்கள் புத்துணர்வு பெறுவதற்காக சாலையோர வசதி மையங்கள் பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் எவ வேலு விடுத்துள்ள அறிவிப்புகள் வருமாறு;

சாலையோர வசதி மையங்கள்
முதலமைச்சரின் பொன்னான திட்டங்களில் ஒன்றான "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.1093 கோடி மதிப்பில் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ஓட்டுநர்கள் புத்துணர்வுடன் பயணத்தைத் தொடர்வதற்கு வசதியாக அதிக வாகனப் போக்குவரத்து உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் "சாலையோர வசதி மையங்கள்" 3 இடங்களில் பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும்.

எல்லா வசதிகளும்
சாலையோர மையங்களில், கனரக வாகனங்கள், பேருந்துகள், மற்றும் சீருந்துகளுக்கான வசதி தனித்தனியே வாகன நிறுத்தும் இடங்கள், ஓட்டுநர்கள்
ஓய்வெடுக்கும் அறைகள், முதலுதவி மையம், உணவகம், எரிபொருள் நிலையம், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ATM), கழிப்பிடம் மற்றும் குளியலறை வசதி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா, குழந்தைகள் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அரங்கம், வாகனம் பழுது பார்க்கும் வசதி போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

பள்ளங்களற்ற சாலை
சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தடையற்ற போக்குவரத்திற்கு பள்ளங்களற்ற சாலைகளை மக்களுக்கு வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. பள்ளங்களை உடனுக்குடன் கண்டறிவதில் பொது மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. பள்ளங்கள் உள்ள சாலை பகுதிகளை தங்கள் கைப்பேசி முலம் புகைப்படம் எடுத்து செயலியில் (Mobile App) பதிவேற்றம் செய்யும் வகையில் கைப்பேசி செயலி (Mobile App) உருவாக்கப்படும்.

24 மணி நேரத்தில் சீரமைப்பு
சாலைகளில் உள்ள பள்ளங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணிநேரத்திலும், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளில் 72 மணிநேரத்திலும் சரி செய்யப்படும். மேலும், சரி செய்யப்பட்ட புகைப்படம் உடனுக்குடன் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறாக "பள்ளங்களற்ற சாலைகள்" என்ற இலக்கை நோக்கி நெடுஞ்சாலைத்துறை முன்னேறி செல்லும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications