அரசியலில் விஜய் கத்துக்குட்டி! பரந்தூர் சென்றபோது கேரவனில் இருந்து வெளிவராதவர்.. கோவி செழியன் பதிலடி
சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடியவர்களை சந்தித்த போது, தவெக தலைவர் விஜய் கேரவனில் இருந்து கூட வெளியில் வரவில்லை என்று அமைச்சர் கோவி செழியன் விமர்சித்துள்ளார். அரசியலில் விஜய் கத்துக்குட்டி என்று கூறியுள்ள அவர், விஜய் இன்னும் அரசியல் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில், பரந்தூர் விமான நிலைய பிரச்சனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினோம். மக்கள் பாதிக்காத வகையில் விமான நிலையம் அமைப்போம் என உங்கள் அரசு சார்பாக விளக்க அறிக்கை கொடுத்திருந்தீர்கள்.

விஜய் பேச்சு
அந்த அறிக்கையில், 1005 குடும்பங்கள் மட்டுமே பரந்தூரில் வசிப்பதால் விமான நிலையம் வந்தால் பெரிய பாதிப்பு இல்லை என சொல்லி இருந்தார்கள். அப்படின்னா என்னங்க சார்? ஒன்று அந்த இடத்தில் விமான நிலையம் வருமென சொல்ல வேண்டும்.. இல்லை அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்று சொல்ல வேண்டும்.. ஆனால் அந்த அறிக்கையில் இந்த இரண்டுமே இல்லை.
திமுக மீது விமர்சனம்
1,005 குடும்பங்கள் என்றால் அவ்வளவு சாதாரணமாக போய்விட்டதா? 15,000 மக்கள்.. அந்த மக்களும் நம்ம மக்கள்தானே.. நீங்க உங்களை மக்களின் முதல்வர் என்று கொஞ்சம் கூட நா கூசாமல் சொல்கிறீர்கள். உங்களுக்கும் பரந்தூர் பிரச்சனைக்கும் சம்பந்தமே இல்லாததை போல் காட்டி கொள்கிறீர்கள். ஆனால் விமான நிலையத்துக்காக பரந்தூரை பரிந்துரை செய்தது உங்களின் அரசுதான்.
தலைமைச் செயலகம் வருவேன்
இதனை சென்னை வந்த மத்திய அமைச்சரே சொல்லிவிட்டார். போராட்டம் நடத்தி வரும் பரந்தூர் விவசாயிகளை முதல்வர் சந்தித்து பேசாதது ஏன்? போராடும் மக்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்கிற உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும். இதனை முதல்வர் ஸ்டாலின் செய்யவில்லை என்றால், பரந்தூர் விவசாயிகளையும் நானே தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வருவேன்.
அமைச்சர் கோவி செழியன் பதிலடி
அவர்களை அழைத்து உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலை உண்டாகும். அப்படியொரு சூழ்நிலை வந்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார். தவெக தலைவர் விஜயின் இந்த பேச்சிற்கு அமைச்சர் கோவி செழியன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து கோவி செழியன் பேசுகையில், 76வது ஆண்டை தொட்டுள்ள திமுகவின் வழிகாட்டு தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்.
தேர்தலில் கூட போட்டியிடாதவர்
அவர் இந்த நாட்டின் மீதும், மக்களின் மீதும் காட்டுகிற அக்கறையை அனைவரும் அறிவார்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு கட்சியை தொடங்கி தேர்தல் வந்த போதெல்லாம் போட்டியிடாமல் விலகி நின்று, நேரடியாக முதல்வர் நாற்காலி தான் எங்கள் எண்ணம் என்று இருக்கிற ஒரு தலைவர், பரந்தூர் பிரச்சனையில் முதல்வர் ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்..
கேரவனில் இருந்து வரவில்லை
அவர் கடந்த முறை பரந்தூருக்கு மக்களை சந்திக்க சென்ற போது, போராட்டக் குழுவினரை சந்திப்பதற்கு கேரவனில் இருந்து கூட வெளியில் வரவில்லை. எனவே, எவரெஸ்ட் மீது குறை சொல்வதற்கு குறைந்தபட்சம் ஒரு உயரம் இருக்க வேண்டும். அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி. ஒரு மூத்த தலைவர் இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்று சொல்வதெல்லாம், அவர் இன்னும் அரசியல் பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று உணர்வதாக தெரிவித்துள்ளார்.
-
ரோடு ஷோவை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு கோவை திரும்பிய விஜய்.. தவெக தொண்டர்கள் கடும் ஏமாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.. நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு.. திருப்பூரில் விஜய் வாக்குறுதிகள் -
ஒரு நாள் ரெஸ்ட், ஒரு நாள் பிரசாரம்.. திருப்பூரில் நாளை ரோடு ஷோ.. விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்! -
வருமான வரியை மறைத்ததாக வழக்கு!ரூ 1.50 கோடி அபராதத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போன விஜய் -
இது தான் தவெகவின் அஜெண்டா.. விஜய் தரப்பு வெளியிட்ட ஏழு முக்கிய திட்டங்கள் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம் -
ஜனநாயகன் படம் ஹைதராபாத் ஸ்டுடியோவில் கசிந்ததா.. எடிட்டர் சங்கம் அளித்த விளக்கம் -
ஜனநாயகன் தயாரிப்பாளருக்காக விஜய் எடுத்த பெரிய முடிவு.. மூன்று பேருக்குள் போட்டி! ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் -
கரூர் கூட்ட நெரிசலில் ஒரே மாதத்தில் பறி போன இரு உயிர்கள்! விரைவில் வெளியாகும் கள அறிக்கை? -
நேர்ல வரலனாலும் நேராகவே பேசுறாரே! ஹாலோகிராமில் கும்பகோணத்தை அதிரவைத்த AI விஜய் -
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்.. உரிமையாளரை கைது செய்த போலீஸ்












Click it and Unblock the Notifications