அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு.. ஜெயக்குமார் பேசுவதை பார்த்தால் என்ன நடக்குமோ?
சென்னை: சென்னைக்கு வரும் சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வராமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்படியே சென்றாலும் அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். கொரோனாவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து கடந்த 31 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அப்போது அதிமுக கொடி கட்டப்பட்ட ஜெயலலிதாவின் காரில் அவர் பயணம் செய்தார். இது சட்டவிரோதம் என அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என டிடிவி தினகரன் ஏற்கெனவே கூறியிருந்தது அதிமுகவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அதிமுக கொடி
இந்த நிலையில் சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டவிரோதம் என அமைச்சர்கள் சிவி சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். இந்த நிலையில் சசிகலா நாளை சென்னை திரும்புவதையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மெரினா
அது போல் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், மெரினாவில் உள்ள நினைவிடங்களில் போலீஸார் கூடுதல் பணியில் இருக்கிறார்கள். மேலும் ஆங்காங்கே பேரிகாடுகள் வைத்தும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சசிகலாவுக்கு ஆதரவாக பேனர்களை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடவடிக்கை
நாளை தமிழகம் வரும் சசிகலா நேராக அதிமுக அலுவலகத்திற்கு செல்வாரா என அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் சசிகலா அதிமுக அலுவலகத்திற்கு சென்றால் அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சசிகலா
இதனிடையே பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், நாளை சசிகலா தமிழகம் வருவது உறுதி. அதிமுகவை மீட்டெடுக்கும் சட்ட போராட்டத்தில் சசிகலா தொடர்ந்து போராடுவார் என்று தெரிவித்தார். எனவே நாளை முதல் அதிமுகவில் ஒரு பெரிய பிரளயமே ஏற்படும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications