சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்துள்ளனர்.. விஜய் பேச்சுக்கு அமைச்சர் பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Vijay speech in Bigil Audio launch | சுபஸ்ரீ மரணம் குறித்து நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு

    சென்னை: மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்துள்ளனர் என செய்தித் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

    பல்லாவரத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (23). இவர் பள்ளிக்கரணைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவர் மீது சாலையில் இருந்த பேனர் விழுந்தது.

    இதில் நிலைத்தடுமாறி விழுந்த சுபஸ்ரீ மீது தண்ணீர் லாரி மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் நெஞ்சுவலி என கூறிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    டிஜிட்டல் பேனருக்குத் தடை.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கடை உரிமையாளர்கள்!டிஜிட்டல் பேனருக்குத் தடை.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கடை உரிமையாளர்கள்!

    விவாதப் பொருள்

    விவாதப் பொருள்

    இந்த நிலையில் லாரி டிரைவரையும் பேனர் டிசைன் செய்த அச்சக உரிமையாளரையும் போலீஸார் கைது செய்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு விவாதப்பொருளாகவும் மாறியது.

    லாரி டிரைவர்

    லாரி டிரைவர்

    இதனிடையே பிகில் இசை வெளியீட்டு விழா கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பேசிய பேச்சுகள் பெரும் தீப்பொறியை ஏற்படுத்தியது. அவர் கூறுகையில், பேனர் விழுந்து லாரி ஏறி இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது பழி போடுவது என்று தெரியாமல் லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள்.

    நல்ல விஷயம்

    நல்ல விஷயம்

    சுபஸ்ரீ விவகாரத்தில் டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருந்திருக்கும். சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். என்னுடைய போட்டோவை உடையுங்கள். போஸ்டரை கிழியுங்கள். ஆனால் என் ரசிகர் மீது கை வைக்காதீங்க. யாரை எங்கு உட்கார வைக்கணுமோ... அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும் என்றார் விஜய். இது பல்வேறு விவாதங்களை எழுப்பியது.

    முடிவு செய்ய வேணடியதில்லை

    முடிவு செய்ய வேணடியதில்லை

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்துள்ளனர். நடிகர் விஜய் போன்றவர்களின் பேச்சை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை.

    நடிகர்கள்

    நடிகர்கள்

    படம் ஓடுவதற்காக நடிகர்கள் பரபரப்பாக பேசுகிறார்கள். யார் கூறியதன் பேரில் விஜய் இவ்வாறு பேசியுள்ளார் என தெரியவில்லை. கமல்ஹாசன் ஒரு அரைவேக்காடு என்பதை அவராகவே ஒப்புக் கொண்டுள்ளார் என்றார் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

    English summary
    Minister Kadambur Raju says that People knows whom to bring to the power in State government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X