10 ஆண்டுகளுக்கு தேவையான அம்சங்கள் வேளாண் பட்ஜெட்டில் இருக்கும்.. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு தேவையான அம்சங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் கரும்பு அறுவடைக்கான புதிய தொழில்நுட்பங்கள் பட்ஜட்டில் அறிவிக்கப்படும் என்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகை தொடர்பாக தீர்வு காண விரைவில் தனியார் ஆலைகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தின் இடையே உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் கூறுகையில் வரும் 14 ம் தேதி பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் தனி நிலை அறிக்கை தொடர்பாக விவசாய அமைப்புகளுடனான கருத்துக் கேட்பு கூட்டம் சேப்பாக்கம் வேளாண்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது..

வேளாண் தனி நிதி நிலை அறிக்கை

வேளாண் தனி நிதி நிலை அறிக்கை

வரும் 14 ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் தனிநிதி நிலை அறிக்கை தொடர்பாக இன்று விவசாய சங்கங்கள் , அரசியல் கட்சி சார்ந்த விவசாய சங்கங்களின் கருத்துகள் இன்று கேட்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் வேளாண் தனி நிதிநிலை அறிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி வரும் 14 ம் தேதி வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஏற்றுமதி சங்கங்களிடம் பேச்சு

ஏற்றுமதி சங்கங்களிடம் பேச்சு

தனி நிதி நிலை அறிக்கை தொடர்பாக வேளாண் விளைபொருள் சார்ந்த வியாபார, ஏற்றுமதி சங்கங்களிடமும் பேசப்பட்டுள்ளது. 10 ஆண்டுக்கு தேவையான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும். விவசாயிகள் தன்னிறைவு அடைய, தலை நிமிர உதவும் பட்ஜெட் இது எம்ற அவர் கடந்த 10 ஆண்டுகளில் உழவர் சந்தைகள் முடக்கப்பட்டன.

கொரோனா காலகட்டம்

கொரோனா காலகட்டம்

தமிழகத்தில் 48,000 வாகனத்தில் கொரோனா காலகட்டத்தில் விவசாய விளைபொருட்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டது. இளைஞர்களுக்கு வேளாண் ஏற்றுமதி தொடர்பாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும், வேளாண் சட்டம் எதிர்ப்பு தொடர்பாக திமுக அரசு உறுதியாக இருக்கிறது. கரும்பு சாகுபடியில் வெட்டுக்கூலி , கூலியாள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனை இருக்கிறது.

புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம்

புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம்

எனவே கரும்பு அறுவடையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்வது தொடர்பான அம்சங்கள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும். கரும்பு விவசாயிகளுக்கு 1200 கோடி தொகை நிலுவையில் உள்ளது. நிலுவைத் தொகை பிரச்சனையில் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கலான பிறகு நலிவுற்ற தனியார் கரும்பு ஆலைகளுடன் அரசு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சுவார்த்தை மூலம் நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+