சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

படுத்த வேகத்தில் டக்குன்னு.. தலைகீழா காலைத் தூக்கி.. அசர வைத்த 'ஆக்டிவ்' அமைச்சர்! வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: நமது பாரம்பர்ய மருத்துவமுறைகளை சிறப்பாக வழங்கி வரும் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் "சித்த மருத்துவ வார் ரூம்"மை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். கையோடு அவர் இடுப்பை குறைப்பதற்காக தலைகீழாக கவிழ்ந்து ஆசனம் செய்தார்.

Recommended Video

    தலைகீழா காலைத் தூக்கி ஆசனம் .. அசர வைத்த அமைச்சர்! வைரலாகும் வீடியோ

    சென்னை அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை உள்ளது. இங்கு . சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் இங்கு அளிக்கப்படுகின்றன.

    யோக சிகிச்சை, உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, நிற சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நறுமண சிகிச்சை, காந்த சிகிச்சை, அக்கு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை என பல்வறு உடல் நலன் சார்ந்த சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது,

    என்னென்ன சிகிச்சை

    என்னென்ன சிகிச்சை

    இந்த மருத்துவமனையில் வந்த நோயைக் குணப்படுத்தவும், நோய்கள் வராமல் தடுக்கவும் பல்வேறு வசதிகள் நோயாளிகளுக்காக செய்யப்படுகிறது. . நாள்பட்ட நோய்கள், தோல் நோய்கள், சைனஸ், பக்கவாதம், சர்க்கரை வியாதிகள் என பல்வேறு நோய்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவனைகளில் தங்கியும் பலர் சிகிச்சை பெறுகிறார்கள்.

    இன்று திறப்பு

    இன்று திறப்பு


    கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் சித்தா பராமரிப்பு மையங்கள் செயல்படுகிறது. அறிகுறிகளற்றவர்கள், லேசான, மிதமான பாதிப்புள்ளவர்களுக்கு சித்த மருத்துவ மருத்துகள், சிகிச்சைகளைப் பரிந்துரைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நோயாளிகள் இந்த மையங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் சித்த மருத்துவ முறையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்காக "சித்த மருத்துவ வார் ரூம்" அமைக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    இந்த மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். இந்த மருத்துவனையில் யோகா சிகிச்சை மிகவும் பிரபலமானது ஆகும். ஆய்வு செய்த போது அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிகாரிளுடன் திடீரென யோகா செய்தார். தரையில் படுத்து, தலைகீழாக காலை தூக்கி யோகா செய்தார். இதை பார்த்த அதிகாரிகள் கைத்தட்டி உற்சாகம் அடைந்தனர்.

    அசர வைத்த அமைச்சர்

    அசர வைத்த அமைச்சர்

    62 வயதாகும் அமைச்சர் மா சுப்பிரமணியன் உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை உள்ளவர் ஆவார். 60வயதை கடந்த பின்னரும் மாரத்தானில் கலந்து கொண்டவர். ஓடியே உடலில் இருந்த சுகரை குறைத்தவர். நோய்கள் நாடாமல் இருக்க உடலை ஆரோக்கியமாக வைத்தால் போதும் என்பதை பலருக்கு உணர்த்தியவர் ஆவார். இடுப்பு சதையை குறைக்கும் ஆசனத்தை இந்த வயதிலும் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்ததை பார்த்து அதிகாரிகள் ஆச்சர்யம் அடைந்தனர்.

    அமைச்சர் வீடியோ

    அமைச்சர் வீடியோ

    இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று வெளியிட்ட பதிவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவுத்தலின்படி அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் "சித்த மருத்துவ வார் ரூம்"என்கிற ஒருங்கிணைந்த கட்டளை மையம் திறப்பு மற்றும் துறை ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் ஒரு பகுதியாக யோகா பயிற்சியில் நான் கலந்துகொண்டோன் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Minister Ma Subramanian did yoga at chennai arumbakkam Arignar Anna Govt Hospital Of Indian Medicine. Video goes viral
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X