ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் வடமாநில தலைவர்கள்.. வதந்திக்கு பின்னணி இதுதானாம்.. அமைச்சர் மா.சு அட்டாக்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் வடமாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை : முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால், சிலருக்கு ஏற்பட்ட பொறாமை காரணமாக வட இந்திய தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்புகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியுள்ளன.
சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பரவிய பொய்யான தகவல்
பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டதாக சில வீடியோக்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. சமூக வலைதளங்களில் பரவும் இந்த தகவல்கள், வீடியோக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், தமிழ்நாட்டில் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்தது.

அரசியல் தலைவர்கள்
இதற்கிடையே, கடந்த மார்ச் 1ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மேடையில் பேசிய தலைவர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவும் பங்கேற்றிருந்தார்.

பொய்யைப் பரப்பும் பாஜக
இந்நிலையில், பீகாரில் உள்ள பாஜகவினர் தமிழ்நாட்டில் உள்ள பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சைலேந்திரபாபு விளக்கம் அளித்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, "பாஜகவிற்கும், உண்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களின் பொய்கள் மீண்டும் வெளிப்பட்டுவிட்டன. பொய், குழப்பம், வெறுப்பு, வன்முறை ஆகியவற்றை பரப்புவதே பாஜகவின் தொழில்." எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.

காவல்துறை தீவிர நடவடிக்கை
எனினும், வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற அவதூறு பிரசாரங்கள் தொடர்ந்து சிலரால் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலேயே இங்கு தான்
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். தமிழ்நாடு வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான இடம் என்பது போல் பொய் தகவலை பரப்புகின்றனர். சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தெரிவித்தார்.

பொறாமை
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் சிலருக்கு பொறாமை. அந்த பொறாமையின் காரணமாக, வட இந்திய தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்புகின்றனர்." என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications