"அதிமுகவினரை காக்கும் பொறுப்பு அவர்கள் தலைமைக்கு உள்ளது" நாளை அதிமுக பொதுக்குழு! அமைச்சர் மா.சு பரபர
சென்னை: நாளை அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக கடந்த சில ஆண்டுகளாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டை தலைமையின் கீழ் தான் செயல்பட்டு வந்தது.
இந்தச் சூழலில் தான், இரட்டை தலைமை வேண்டாம் என்றும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றும் குரல்கள் கட்சிக்குள்ளேயே எழுந்தது.

ஒற்றை தலைமை
கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் நிர்வாகிகள் மத்தியில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கிட்டதட்ட சமமான ஆதரவே இருந்ததாகக் கருதப்பட்டது. இருப்பினும், நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி தரப்பிற்கு ஆதரவு அதிகமானது. பொதுக்குழுவிலும் கூட எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு அதிகம் எனக் கூறப்பட்டது.

அதிமுக
இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். முதலில் 23 தீர்மானங்களைத் தவிர வேறு எதையும் நிறைவேற்றக் கூடாது என்று நீதிமன்றம். அதைத் தொடர்ந்து ஜூன் 23இல் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் பெரிய திருப்பங்கள் அரங்கேறியது. முன்மொழியப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. மேலும், அதிமுக தொண்டர்கள் பெரும்பாலும் ஒற்றை தலைமையையே விரும்புவதாகவும் இது தொடர்பான தீர்மானத்துடன் அந்த 23 தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

பொதுக்குழு
நாளை (ஜூலை 11) அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் மறுபுறம் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க கோரி ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்கில் நாளை காலை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பும் மாநிலத்தில் அதிகரித்து வரும் சூழலில், இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்கள் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
இன்று மாநிலத்தில் தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில், புதுக்கோட்டை விராலூர் பகுதியில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 சதவீதமாக உள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு எண்ணிக்கை 93 சதவீதமாக உள்ளது தமிழக அளவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவு தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை உள்ளது.

தமிழ்நாடு
கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவும் நிலையில், அதைத் தடுக்க எல்லையில் இருக்கும் 13 தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் யாருக்கும் இந்த பாதிப்பு இல்லை. நீட் விலக்கு தொடர்பாகக் குடியரசுத் தலைவரும் உள்துறை அமைச்சகமும் இணைந்து பேசி ஒரு நல்ல முடிவு எடுத்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.

அதிமுக பொதுக்குழு
தொடர்ந்து அதிமுக பொதுக்குழு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "இப்போது 10 பேர் ஒன்று கூடினாலேயே மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே அவரது கட்சிக்காரர்களைக் காப்பாற்றும் பொறுப்பு கட்சித் தலைமைக்கு உண்டு. கட்டாயம் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications