பள்ளி மாணவர்களுக்கு சாதி, மத அடையாளம் தேவையில்லை.. அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்!
சென்னை: மதத்தால், சாதியால் மாணவர்களை அடையாளப்படுத்த நினைப்பது ஆரோக்கியமான, நல்ல அணுகுமுறை அல்ல என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிய வேண்டும் என்று அண்ணாமலை பேசிய நிலையில், மாணவர்கள் உள்ளத்தில் சமத்துவ சிந்தனையையும், சகோதரத்துவத்தையும், அன்பையும் சுமந்து செல்ல வேண்டும் என்று மனோ தங்கராஜ் அறிவுறுத்தி இருக்கிறார்.
மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான பாஜகவினர் மதுரையில் கூடினர். இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, அவரின் மகன் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்ணா, பெரியார்
அவர் முன்பாகவே திராவிடத் தலைவர்களான பெரியார், அண்ணா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அப்போது அரங்கிலேயே அமைதியாக இருந்த அதிமுக தலைவர்கள், கடந்த 2 நாட்களாக விளக்கம் அளித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். இதனிடையே மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை பேசிய பேச்சு விமர்சனத்தை பெற்று வருகிறது.
அண்ணாமலை பேச்சு
அண்ணாமலை பேசுகையில், இந்துக்களின் வாழ்வியல் முறைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இந்து மக்களிடையே ஒற்றுமை இல்லாததால், இந்து வாக்குகளை அரசியல்வாதிகள் பெற்று கொண்டு, மதத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள். பள்ளிகளுக்கு செல்லக் கூடிய குழந்தைகள் கூட நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்து செல்ல வேண்டும்.
சர்ச்சை
ஆளும் ஆட்சியாளர்களுக்கு முருகன் மாநாடு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. முருகன் கோயில் வழிபாடுகளில் தலையிட்டால் ஒவ்வொரு வீடுகளிலும் சூரசம்காரம் செய்துவிடுவோம் என்று தெரிவித்தார். மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது திருநீர் மற்றும் ருத்ராசம் அணிய வேண்டும் என்ற பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மனோ தங்கராஜ் பதிலடி
இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். அதில் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் உள்ளத்தில் சமத்துவ சிந்தனையையும், சகோதரத்துவத்தையும், அன்பையும் சுமந்து செல்ல வேண்டும். அதுவே அறிவின் அடையாளம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தமிழ் சமூகத்தின் சிறந்த அடையாளத்தை தவிர வேறு எந்த சாதி, மத அடையாளங்களும் மாணவர்களுக்கு தேவையில்லை.
மத, சாதி அடையாளம் தேவையில்லை
மதத்தால், சாதியால் மாணவர்களை அடையாளப்படுத்த நினைப்பது ஆரோக்கியமான, நல்ல அணுகுமுறை அல்ல என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் பள்ளி மாணவர்களுக்குள் எந்த பாகுபாடும், வித்தியாசமும் இருக்க கூடாது என்பதற்காகவே ஒரே மாதிரியான யூனிஃபார்ம் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications