எல்லாமே பொய்.. எழுதி கொடுப்பதில் கையெழுத்து போடும் எடப்பாடி! எகிறி அடித்த எம்ஆர்கே பன்னீர்செல்வம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த டெல்டா விவசாயிகளின் குறுவைத் தொகுப்பு அறிவிப்பு மக்களை ஏமாற்றும் நாடகம் என எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"16.06.2024 அன்று தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் டெல்டா விவசாயிகளின் குறுவைத் தொகுப்பு அறிவிப்பு மக்களை ஏமாற்றும் நாடகங்களில் ஒன்று எனவும் அதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். உண்மைகளை மறைத்து யாரோ எழுதிகொடுப்பதை கையெழுத்திட்டு அறிக்கையாக வெளியிடும் எதிர்கட்சி தலைவர் அவர்களுக்கு பின்வரும் விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

Edappadi Palaniswami AIADMK Dmk Mk Stalin

நீர்ப்பற்றாக்குறை பாசன ஆண்டான 2023-24-ல் தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளால் 84.4 டி.எம்.சி. நீர் பெறப்பட்டதுடன். இவ்வாண்டின் ஆரம்பத்தில் மேட்டூர் அணையிலிருந்து கிடைக்கப்பெற்ற 69.25 டி.எம்.சி. நீர் முறை பாசனம் மூலம் பங்கீடு செய்ததன் பலனாக, அனுமதிக்கப்பட்ட 17 இலட்சம் ஏக்கருக்கு, 15.99 இலட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. மேலும், குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்காக மேட்டூர் அணையின் நீர் இருப்பை சேமித்து 11.10.2023 முதல் 31.05.2024 வரை சுமார் 18 டி.எம்.சி. நீரினை குடிநீர் தேவைக்காக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. 14.06.2024 2024- 25ஆம் பாசன ஆண்டுக்கான முதல் காவிரி நீர் முறைபடுத்தும் குழுவின் (CWRC) கூட்டத்தில் நமக்குரிய நீரினை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இக்குழவின் அடுத்த கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும் போது தமிழ்நாட்டிற்குரிய நீர் பங்கினை உடன் வழங்கிட மென்மேலும் வலியுறுத்தப்படும்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மழை இல்லாத காலங்களில் குறுவை தொகுப்பானது எந்த அளவுகோலை பின்பற்றி விவசாயிகளின் தேவைக்கு வழங்கப்பட்டதோ. அதைவிட கூடுதலாக, சிறப்பாக இவ்வரசால் 16 மணிநேரம் மும்முனை மின்சாரமும், 1 இலட்சம் ஏக்கருக்கான 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகளும், தற்பொழுது கூடுதலாக வழங்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலாத தொடர் தோல்வியின் நாயகரான எதிர்கட்சி தலைவர் அவர்கள் திடீரென்று விவசாயிகளின் மீது அக்கறை கொண்டு அறிக்கை ஒன்றினை யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே வெளியிட்டுள்ளார். முந்தைய ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை தூக்கிபிடித்து விவசாயிகள் தொடர்ந்து போராடி மடிந்தனர் என்பது இவருக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை அறிக்கை வெளியிடும்போதும் தன்னுடைய ஆட்சி காலத்தில் நடந்தேறிய அவலங்களை கருத்தில் கொள்ளாமல் உண்மைக்கு புறம்பாக தானும் குழம்பி நாட்டுமக்களை குழப்புவதையே தொடர்ந்து செய்து கொண்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மழை இல்லாத காலங்களில் குறுவை தொகுப்பானது எந்த அளவுகோலை பின்பற்றி விவசாயிகளின் தேவைக்கு வழங்கப்பட்டதோ. அதைவிட கூடுதலாக, சிறப்பாக இவ்வரசால் 16 மணிநேரம் மும்முனை மின்சாரமும், 1 இலட்சம் ஏக்கருக்கான 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகளும், தற்பொழுது கூடுதலாக வழங்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலாத தொடர் தோல்வியின் நாயகரான எதிர்கட்சி தலைவர் அவர்கள் திடீரென்று விவசாயிகளின் மீது அக்கறை கொண்டு அறிக்கை ஒன்றினை யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே வெளியிட்டுள்ளார். முந்தைய ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை தூக்கிபிடித்து บดัง விவசாயிகள் தொடர்ந்து போராடி மடிந்தனர் என்பது இவருக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை அறிக்கை வெளியிடும்போதும் தன்னுடைய ஆட்சி காலத்தில் நடந்தேறிய அவலங்களை கருத்தில் கொள்ளாமல் உண்மைக்கு புறம்பாக தானும் குழம்பி நாட்டுமக்களை குழப்புவதையே தொடர்ந்து செய்து கொண்டுள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் மூலம் சமூக நாற்றங்கால் முறையில் அரசு உதவியோடு நாற்றங்கால் வளர்க்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகு தண்ணீர் கிடைக்கும் போது விவசாயிகள் பிரச்சனையின்றி நெல் பயிர் செய்வதற்கு மானிய விலையில் நாற்றங்கால் வழங்கப்பட்டது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சமூக நாற்றங்கால் முறை திட்டமானது முழுமையான தோல்வி கண்ட திட்டம் ஆகும். தற்பொழுது விவசாயிகள் ஆழ்துளை குழாய் கிணறு மூலம் பெறப்படும் நீரைக்கொண்டு நேரடி நெல் விதைப்பு செய்யும் முறை மூலம் விவசாயிகள் அதிக பலனை பெறுவதால் தொடர்ந்து அது போன்று விவசாய முறை மூலம் தான் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.

மூன்றாண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் இயற்கை இடர்பாடுகள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி மூலம் ரூபாய் 270 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட பொழுது அவர்களின் நலன் கருதி இதுவரை பேரிடர் நிவாரணநிதியாக ரூபாய் 833 கோடியே 87 லட்சம் கழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகளின் நலன் காத்திட இவ்வரசு பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு தனி வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் மற்றும் மானிய கோரிக்கையின் போதும் பல்வேறு அறிவிப்புகளை செய்து அதன் பலன் விவசாயிகளுக்கு நேரடியாக கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறுவை தொகுப்பு அறிவிப்பினை நாடகம் என சொல்லும் எதிர்க்கட்சித் தலைவர், தனது ஆட்சியில் அறிவித்துவிட்டு செயல்படுத்தாமல் போன திட்டங்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காது.

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரியும், புனரமைத்தும், சீரமைத்தும், புதிய நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தியும் மழை நீரை வீணாக்காமல் சேமித்து நிலத்தடி நீரை செறி ஊட்டியதால் நுண்ணீர் பாசனம் போன்ற தொழில்நுட்பங்களை பரவலாக்கி பாசன நீரின் பயன்பாட்டினை அதிகரித்ததால் 2020-21 ஆம் ஆண்டில் 89 இலட்சம் ஏக்கராக இருந்த பாசனபயிர் பரப்பு கடந்த 2022-23 ஆம் ஆண்டில் 95 இலட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

தற்பொழுது, 16 மணி நேரம் வரை மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதன் மூலம், குறுவை சாகுபடி நெற்பயிர் பரப்பு கடந்த ஆட்சிகாலத்தில் இருந்தததை விட ஒன்றரை இலட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளது. மேலும், 2020-21ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 108 இலட்சம் மெட்ரிக் டன் ஆக இருந்த நிலையில், இவ்வரசு செயல்படுத்திய பல்வேறு சிறப்பு முயற்சிகள், உத்திகள், சிறப்பு திட்டங்கள் போன்றவைகளால் உணவு தானிய உற்பத்தி 2023-24ஆம் ஆண்டில் 118 இலட்சம் மெட்ரிக் டன் அளவில் உயர்ந்துள்ளது இவ்வரசின் இமாலய சாதனையாகும்.

இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு ஆண்டும் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து வருகிறது. 2021-22 ஆம் ஆண்டில், ரூபாய். 69.06 கோடியும், 2022-23 ஆம் ஆண்டில், ரூபாய் 61.12 கோடியும், 2023-24 ஆம் ஆண்டில், ரூபாய்.75.95 கோடியும் வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தியதன் வாயிலாக 9,46,442 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். குறுவை தொகுப்புத்திட்டம் கடந்த 3 வருடங்களாக செயல்படுத்தியதன் பயனாக கடந்த ஆட்சிக்காலத்தில் சாகுபடி செய்யப்ப்டட

பரப்பளவை விட தற்பொழுது இவ்வரசு பொறுப்பேற்ற காலத்தில் 1.47 இலட்சம் ஏக்கர் பரப்பளவு கூடுதலாக சாகுபடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், இந்த கூடுதல் பரப்பின் மூலம் நெல் உற்பத்தி சுமார் 2 இலட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது கழக அரசின்
சாதனைகளின் ஒரு மணிமகுடமாகும்.

மேலும், இந்த ஆண்டில் விவசாயிகள் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பில் இருந்து பாதுகாத்திட ரூ.1.775 கோடி நிதி ஒதுக்கீட்டில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறுவை பருவம் உட்பட சம்பா, நவரை மற்றும் கோடை பருவங்களிலும் இத்திட்டம் செயல்படுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் குறுவை பருவத்திற்கான விவசாயிகள் பதிவு தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி, அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக தெரிவித்துக் கொள்வதுடன். இத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை அதிமுக ஆட்சியில் விடியாமல் இருந்த விவசாயிகளின் வாழ்க்கைத் தரம், வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கையின் மூலம், தமிழக விவசாயிகள் விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த உண்மையை கூடிய விரைவில் எதிர்க்கட்சித் தலைவருக்கு புரிந்துவிடும் என தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+