நாங்க இவ்ளோ பணம் கொடுக்கிறோம்! நீங்க என்ன கொடுக்கிறீங்கன்ற வாதமே தவறு! சென்னையில் நிர்மலா தாக்கு
சென்னை: நாங்க இவ்ளோ பணம் கொடுக்கிறோம், நீங்க என்ன கொடுக்கிறீர்கள் என்ற வாதமே தவறு" என சென்னையில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.
தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ செய்வதற்கு இருந்தாலும் மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்புகின்றனர் என்றும் அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். ஜிஎஸ்டி வரியில் அதிக பங்கு கொடுக்கும் தமிழகத்திற்கு கல்வி நிதி கொடுக்க மறுப்பதா என தமிழக அரசு கேள்வி எழுப்பியிருந்ததற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள பீகாருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்குக் கூட நிதி ஒதுக்கப்படவில்லை என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்க கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. தமிழகத்தில் ஒரு விவாதம் இருந்து வருகிறது. தமிழகம் 1 ரூபாய் கொடுத்தால், பதிலுக்கு அந்த மாநிலத்திற்கு 7 பைசா கூட வழங்குவதில்லை என்கிறார்கள். முதலில் இந்த வாதமே தவறு. இந்த கணக்கை எங்கிருந்துதான் போடுகிறார்களே தெரியவில்லை. இது போல் குதர்க்கமாக பேசக் கூடாது. அப்படி பேசுறவங்க கூட்டி கழிச்சு பாருங்க.
தமிழகத்தில் சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிக வருவாய் கிடைக்கிறது. அதற்காக மற்ற மாவட்டங்களுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என கூறிவிட முடியுமா? தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ செய்வதற்கு இருந்தாலும் மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்புகின்றனர். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு உழைக்க கட்டுப்பட்டிருக்கிறது. நான் பட்ஜெட் குறித்து பேசுவதற்காக இங்கு வந்துள்ளேன். இங்கு நடக்கும் ஊழல் குறித்து பேச விரும்பவில்லை. சாதாரண மக்களுக்கு இன்னும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தமிழகத்திற்கு மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகளையும் பட்டியலிட்டார். அதில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிரதமரின் உஜ்வாலா திட்டம் மூலம் 41 லட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆயுஷ்மான் திட்டம் மூலம் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் வீதம் 79 லட்சம் குடும்பங்களுக்கு சுகாதார காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.4100 கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 94 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 54 கி.மீ. தூரத்திற்கும் மேல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 50 ஆண்டு வட்டியில்லா கடன்களும் வழங்கப்படுகின்றன.
நீங்கள் வேண்டும் என்றால் பாருங்கள், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாகும். அதற்கு அடித்தளமான திட்டங்கள் தற்போதைய பட்ஜெட்டில் உள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் சிகிச்சை பராமரிப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் ஏழை, பணக்காரர் என யாரையும் விட்டு வைக்காமல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்காக பராமரிப்பு மையம் அமைக்கப்படுகிறது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications