ஒரே ஒரு கேள்வி.. சட்டுனு டென்ஷனான நிர்மலா சீதாராமன்.. "அந்த ரூ.4000 கோடி என்னாச்சு!" பயங்கர கோபம்
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடுமையாகச் சாடினார்.
இம்மாத தொடக்கத்தில் வட தமிழ்நாட்டு மாவட்டங்களை மிக்ஜாம் புயல் மிகக் கடுமையாகப் பாதித்தது. அனைத்து பகுதிகளிலும் மழை நீர் தேங்கிய நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவே சில நாட்கள் வரை ஆனது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரிக் கடலில் மையம் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென்தமிழகத்தில் பெருமழை கொட்டியது. குறிப்பாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மழை அதிகம் பெய்தது.
பெருவெள்ளம்: கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெருமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக காயல்பட்டினத்தில் வழக்கமாக ஆண்டு முழுக்க பெய்யும் மழை அளவான 95 செமீ மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. தென் தமிழ்நாட்டு மாவட்டங்கள் இந்த கனமழையால் கடுமையாகப் பாதித்துள்ளது. இப்படிக் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டைத் தாக்கிய இரு வேறு பெருமழையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்து மழை என்றாலே அச்சப்படும் சூழலே இருக்கிறது.
தமிழ்நாடு வெள்ளம்- தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது-ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்: இதற்கிடையே இந்த பெருமழை தொடர்பாகவும் இதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மழை குறித்து துல்லியமான கணக்கு இல்லை என்கிறார்கள் சரி. கனமழைக்கு அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன.. அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வழக்கமாக மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் என்றாலும் பொறுப்பு அமைச்சர்கள் அங்கே சென்று மக்களை மீட்டிருக்க வேண்டும் தானா.. ஆனால் அவர்கள் அங்கே எப்போது சென்றார்கள். என்டிஆர்எஃப் டீம் செல்லும் முன்பு தமிழக அரசில் இருந்து எந்தவொரு அதிகாரியும் அங்கே செல்லவில்லை.
ரூ. 4000 கோடி என்னாச்சு: சென்னையில் ரூ.4000 கோடி செலவு செய்து 92% மழைநீர் வடிகால் பணிகளை முடித்துவிட்டோம் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். என்ன மழை வந்தாலும் சென்னை எதுவுமே ஆகாது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், வெள்ளம் வந்த பிறகு அவர்கள் என்ன சொன்னார்கள். ரூ.4000 கோடியில் 42% மட்டுமே செலவழித்தோம். மீதியை செலவழிக்கவில்லை என்கிறார்கள்.
ரூ.4000 கோடி செலவு செய்துவிட்டோம் என்று நீங்களே சொன்னீர்கள். அந்த பணம் எங்கே போனது. அந்த நம்பர் ஏன் மாறியது. வானிலை மையம் இன்ச் டூ இன்ச் சரியாகச் சொல்லி இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம் என்பவர்களிடம் கேட்கிறேன். நீங்கள் அந்த ரூ. 4000 கோடிக்குச் சரியாகக் கணக்குக் காட்டவில்லையே.. 92% என்று சொன்னவர்கள் 42% என்கிறீர்களே ஏன்.
வித்தியாசம் தெரியாதா: 92%க்கும் 42%க்கும் வித்தியாசம் தெரியாமல் பேசியவர்கள். இன்று வானிலை அறிக்கை துல்லியமாக இல்லை என்கிறார்கள். வானிலை அறிக்கை ஒரு இன்ச் கூட பெய்யும் எனச் சொல்லி இருந்தால் எல்லாம் பக்காவான நடவடிக்கை எடுத்திருப்போம் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது. இது என்ன அநியாயமா இருக்கு.
நீங்கள் மழை வரும் முன்பு 92% என்று என்கிறீர்கள். மழை வந்த பிறகு 42% என்கிறீர்கள். பிறகு என்ன நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ரூ.4000 கோடியில் 42% மட்டும் செலவு செய்தால் என்ன அர்த்தம். டிசம்பர் 12ஆம் தேதியே எச்சரிக்கை கொடுத்தும் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்ன அர்த்தம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications