தமிழ்நாடு வெள்ளம்.. தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறையே இல்லை.. நிர்மலா சீதாராமன் பேட்டி
டெல்லி: தமிழ்நாடு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். மாநிலங்களின் வெள்ள பாதிப்பை எல்லாம் தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை கிடையாது என கூறியுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மிக்ஜாம் புயல் வட தமிழ்நாட்டு மாவட்டங்களை மிக கடுமையாக பாதித்தது. இதனைத் தொடர்ந்து குமரிக் கடலில் மையம் கொண்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பெருமழை கொட்டியது. தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 100 ஆண்டுகளுக்குப் பின் பெருமழை கொட்டியது. காயல்பட்டினத்தில் ஒரு ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் 95 செமீ அளவுக்கு கொட்டியது. இதனால் தென் தமிழ்நாட்டு மாவட்டங்கள் மிக மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றன. இன்னமும் தென் தமிழ்நாட்டு மாவட்டங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீளவில்லை.

இதனிடையே தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பு விவரங்களை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து விவரித்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து நேற்று வெள்ள பாதிப்பு பகுதிகளையும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் தமிழ்நாடு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.
இந்த நிலையில் டெல்லியில் தமிழ்நாடு வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மழை வெள்ளம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை விடுத்து வந்தது. இத்தனை செமீ மழைதான் பெய்யும் என துல்லியமாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்க முடியாது.

தென் தமிழ்நாடு வெள்ள பாதிப்பில் மொத்தம் 31 பேர் பலியாகி உள்ளனர். தென் தமிழ்நாடு வெள்ள பாதிப்பில் சிக்கிய 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஶ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 800 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய விமானப் படையின் 9 ஹெலிகாப்டர்கள் 70 முறை மீட்பு பணியில் ஈடுபட்டன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2 கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணிநேரமும் தமிழ்நாடு வெள்ள பாதிப்பை கண்காணித்து வந்தது. மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ளம் என தனியாக நிதி கொடுக்கவில்லை. வழக்கமான பேரிடர் நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. நாட்டின் பல மாநிலங்களிலும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை எந்த மாநில வெள்ள பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. அதனால் தமிழ்நாட்டு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடர் என பிரகடனப்படுத்த முடியாது. மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கும் வழக்கமும் மத்திய அரசிடம் இல்லை. உத்தராகண்ட்டுக்கும் செய்யவில்லை வேறு எந்த மாநிலத்திற்கும் அவ்வாறு அறிவிப்பு வெளியிடவில்லை. இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனிடையே பல வருடங்கள் முன்பாக அதாவது 1999ம் ஆண்டு ஒடிசா புயல் சம்பவத்தை தேசிய பேரிடர் என்று அறிவித்தார்களே என்று திமுகவினர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications