சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இறங்கி அடிக்கும் ஸ்டாலின்.. "ஸ்ட்ரைட்டா களத்துக்கே வந்து நிரூபித்தார்".. புகழ்ந்து தள்ளிய அமைச்சர்

: முதல்வரை அமைச்சர் பெரிய கருப்பன் புகழ்ந்து பேசியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தித்து மேற்கொண்ட நடவடிக்கையால், உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 50 சதவீதமாக குறைந்துள்ளது. கோட்டையில் இருந்து உத்தரவு போடாமல், நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்" என்று

திருப்பூரில் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் பெரியகருப்பன் சொன்னதாவது:

கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்! கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

நகரங்களைவிட கிராமங்களில் தொற்று அதிகமாக பரவுவதால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 3 நாளாக சிறப்பு கவனம் செலுத்துகிறோம்.

 பேட்டி

பேட்டி

நோய் பாதித்தோரை வகைப்படுத்தி, முறைப்படுத்தி சிகிச்சை வழங்குவதால், நோயிலிருந்து விரைவாக குணமாகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளும், அருகில் உள்ள நகருடன் தொடர்பில் இருப்பதால், தொற்று ஏற்படுகிறது. தொடர் நடவடிக்கையால், 3 ஊராட்சிகளில் ஒருவருக்கு கூட கொரோனா நோய் தொற்று இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

மாவட்டம்

மாவட்டம்

அதேபோல, அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை திகழும்... முழு ஊரடங்கை மக்கள் முறையாகப் பின்பற்றியதால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் ஊரகப்பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு இருப்பதால்தான் முதல்வர் செயலர்களை அனுப்பியுள்ளார். மருத்துவமனைகளுக்குத் தேவையான டாக்டர்கள், நர்ஸ்கள், நியமிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    Modi-க்கே ஜெர்க் கொடுக்கும் MK Stalin| Oneindia Tamil
     பாதிப்பு

    பாதிப்பு

    முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தித்து மேற்கொண்ட நடவடிக்கையால், உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 50 சதவீதமாக குறைந்துள்ளது. கோட்டையில் இருந்து உத்தரவு போடாமல், நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.. அதிலும், பாதுகாப்பு கவசம் அணிந்து, தொற்று நோயாளிகளை சந்திக்க சென்றதில், அவரது மனிதநேயம் வெளிப்படுகிறது..!

     அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனம் செய்கிறார்கள்... ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் முதலமைச்சர் 2 முறை கோவை மாவட்டத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமென்றால் நாமும் ஏரியில் போய் தெர்மாகோல்தான் விடணும்" என்றார்.

    English summary
    Minister Periyakaruppan praises CM MK Stalin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X