பாஜகவிற்கே முதல்வர் கொடுத்து இருக்காரு! ஒரே போடாக போட்ட பொன்முடி.. அப்பாவு அடித்த பரபர கமெண்ட்!
சென்னை: அரசு கல்லூரிகள் அமைப்பது பற்றிய அதிமுக எம்எல்ஏ கேபி முனுசாமியின் கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பதில் அளித்தார்.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபை கூட்டதொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று சட்டசபையில் இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக உதவி பொருள் அனுப்புவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பொருளாதார உதவி செய்ய அனுமதி கோரும் தீர்மானத்தை தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அவையில் இன்று பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து பேசினர்.

கல்லூரி கேள்வி
அதிமுக எம்எல்ஏ கேபி முனுசாமி, வேப்பனஹள்ளியில் தொழில்நுட்ப கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். எங்கள் தொகுதியில் அரசு தொழில்நுட்ப கல்லூரிகள் இல்லை. மாணவர்கள் இதனால் வெளியூரில் சென்று படிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதை சரி செய்யும் வகையில் அங்கு பல்துறைகளின் அரசு தொழில்நுட்ப கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

பொன்முடி பதில்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன் முடி, 10 மாதங்களில் 31 கல்லூரிகளை அறிவித்து இருப்பவர் தமிழ்நாடு முதல்வர். அங்கு அரசு கல்லூரி இல்லாத பட்சத்தில் அதை சோதனை செய்து கண்டிப்பாக உங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்வோம். நீங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர் என்றும் கூட பார்ப்பது இல்லை. காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கை வைத்தார் என்று ஒரு கல்லூரி கொடுக்கப்பட்டுள்ளது.

பாஜக உறுப்பினர்
பாஜக உறுப்பினர் கேட்டார் என்று சென்ற ஆண்டே கல்லூரி கொடுக்கப்பட்டது. பாஜகவிற்கே கொடுத்துள்ளார். அவரின் கோரிக்கை போன வருடமே நிறைவேற்றப்பட்டது. பாமக மணி கேட்டார் என்று கல்லூரி கொடுக்கப்பட்டுள்ளது. மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் கேட்டார் என்று கல்லூரி கொடுத்துள்ளோம். சிபிஐ உறுப்பினர் கேட்டார் என்று கல்லூரி கொடுத்து இருக்கிறோம். இப்போது நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள்.

அப்பாவு கமெண்ட்
அதையும் கொடுக்க போகிறோம். முதல்வரிடம் பேசுகிறேன். உங்கள் தொகுதியில் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகள் இல்லை என்றால் கண்டிப்பாக அதை கட்டித்தர ஏற்பாடு செய்வோம். இதில் என்ன இருக்கிறது. அடுத்த வருடத்தில் கட்டித்தர ஏற்பாடு செய்கிறோம் என்று பொன்முடி பதில் அளித்தார். இதை கேட்ட சபாநாயகர் அப்பாவு, எல்லா கட்சிக்காரர்களுக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்லிட்டீங்க என்று கூறி சிரித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications