தேசியக் கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய முடியாது! அமைச்சர் பொன்முடி மிகத் திட்டவட்டம்!
சென்னை: தேசியக் கல்விக் கொள்கையை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மிகத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
சட்டப்பேரவையில் ஒ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், மாநில கல்விக் கொள்கை உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்ற தகவலையும் அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டம்
தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தேசியக் கல்விக் கல்விக் கொள்கை தொடர்பாக எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசினார்.

அமைச்சர் பொன்முடி
அப்போது கூறிய அவர், ஒரு போதும் தேசியக் கல்விக் கொள்கையை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்றும் நுழையவும் முடியாது எனவும் மிக உறுதிப்படக் கூறினார். அதே வேளையில், மாநில கல்விக் கொள்கை உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்பதை பேரவையில் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி. ஆரம்பம் முதலே தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதில் திமுக உறுதியாக நின்று வருவது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசு
மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதுடன் தேவையற்ற விவகாரங்களை மாணவர்கள் மீது திணிக்கும் வகையில் இருக்கிறது என்பது திமுகவின் குற்றச்சாட்டாகும். இதனால் தான் தேசியக் கல்வி கொள்கை எதிர்ப்பு நிலைப்பாட்டில் திமுக உறுதிகாட்டுகிறது. மேலும், இந்த கல்விக் கொள்கை ஏற்கப்பட்டால் பேராசிரியர் நியமனம் முதல் துணை வேந்தர் நியமனம் வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும் என்பதும் திமுகவின் புகாராக இருக்கிறது.

அமைச்சர் திட்டவட்டம்
இதனிடையே தேசியக் கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை இன்று மீண்டும் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் அமைச்சர் பொன்முடி. இதனிடையே மாநிலக் கல்விக் கொள்கை உறுப்பினர் நியமனம் ஏப்ரல் முதல் வாரத்தில் இருக்கும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications