மாஸ்டர்பிளான்.. ஸ்டாலினின் கனவு திட்டம்.. பட்ஜெட்டில் வரும் முக்கிய அறிவிப்பு! அடித்து சொன்ன பிடிஆர்
பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
சென்னை: 2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான சில அப்டேட்களை வெளியிட உள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஈரோடு கிழக்கில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு கஜானாவை அதிமுக காலி செய்துவிட்டது. அது மீட்டு எடுக்க தாமதம் ஆகிவிட்டது. இப்போதுதான் கஜானா மீண்டு வருகிறது.

கஜானா
இந்த நிலையில் மார்ச் மாதம் இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால் ஆளும் திமுக சார்பாக திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின்பாக இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு இருக்கும். திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

நிதிநிலை
கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. முக்கியமாக தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் சரியாகவில்லை என்ற காரணத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே தற்போது பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

வேலைவாய்ப்பு
இந்த நிலையில் இந்த பட்ஜெட் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான சில அப்டேட்களை வெளியிட உள்ளார். இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது பேச்சில், வேலைவாய்ப்பு உருவாக்குவதுதான் அரசின் கொள்கை. கடந்த இரண்டு வருடத்தில் அதற்கு ஏற்ற திட்டங்களை வகுத்து இருக்கிறோம். மக்கள் பலருக்கு வேலை கிடைக்கும் விதமாக திட்டங்களை வகுத்து உள்ளோம். இதனால் வேலை வாய்ப்பு முன்பை விட தற்போது அதிகம் ஆகி உள்ளது. இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகளை வெளியிடுவோம். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பல புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும். முக்கியமாக சுயதொழில் செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

ஸ்டார்ட் அப்
வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். வீட்டிற்கு ஒரு ஸ்டார்ட் அப் என்று தொடங்கினால்தான் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் டாலருக்கு உயர்த்த வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டம்.தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் என்ற அளவில் உயர்த்த வேண்டும் என்றால் அதற்காக வீட்டிற்கு ஒரு ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும். 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும். பல துறை அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. பல முக்கிய அறிவிப்புகள் கண்டிப்பாக பட்ஜெட்டில் இடம்பெறும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications