ஆடியோ விவகாரம் எல்லாம் ஒன்றும் இல்லை! பிடிஆர் பெயர் நீக்கம் ஏன் தெரியுமா? வெளியான பரபரப்பு காரணம்
சென்னை: மதுரையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார் என கூறியிருந்த நிலையில் அவரது பெயர் நோட்டீஸிலிருந்து நீக்கப்பட்டதற்கு ஆடியோ விவகாரம் என சொல்லப்பட்ட நிலையில் அது தவறு என்றும் அதற்கான காரணம் என்ன என்பதும் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றதும் அவர் படித்த மேதை அதனால் சரியான நபரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்டது என பலர் பாராட்டி வந்தனர். அது போல் ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய அரசை குறிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேள்வி கேட்ட போதெல்லாம் சபாஷ் கூறிவந்தனர்.

இந்த நிலையில் ரூ 30 ஆயிரம் கோடி பணம் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஒரு ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.
ஆடியோ வைரல்: இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அதில் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். என்னை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோரிடம் இருந்து பிரிப்பதற்காக ஒரு கும்பல் முயற்சித்து வருகிறது என விளக்கம் அளித்தார்.

உள்துறை அமைச்சகம்: இந்த நிலையில் இந்த ஆடியோ விவகாரத்தை அதிமுக உள்துறை அமைச்சகம் வரை கொண்டு சென்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை பறிக்கப்படும் என செய்திகள் பரவியது. இந்த நிலையில் இதற்கு முதல்வர் எந்த பதிலையும் சொல்லவில்லை என எதிர்க்கட்சிகளான பாஜகவும் அதிமுகவும் விமர்சித்திருந்தன.
உங்களில் ஒருவன்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட உங்களில் ஒருவன் பதில்கள் என்ற வீடியோவில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேலின் ஆடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், இதுகுறித்து அவரே இரண்டு முறை விரிவான பதிலளித்துவிட்டார். மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக உள்ளது. மேலும் இது குறித்து பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.

நெருக்கடியில் முதல்வர்: எனினும் முதல்வர் ஸ்டாலின் இந்த ஆடியோ விவகாரத்தில் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார் என்பதை மறுக்க முடியாது. இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்த திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. இதற்காக குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி அந்த நாட்களில் தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.
3 நாட்களில் மாற்றம்: அதில் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்பார்கள் என அதற்கான பட்டியல் முரசொலி நாளிதலில் கடந்த மே 3 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதில் மதுரை மாநகர் சார்பில் காமராஜபுரம் பகுதியில் ஆனந்தன், வில்லாபுரம் பகுதியில் ரகுபதி, சிம்மக்கல் பகுதியிஸல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திருப்பரங்குன்றம் வடக்கு ஒன்றியத்தில் வாசு முத்துசாமிஸ ஜீவா நகர் பகுதியில் சரவணன், பெத்தாணியாபுரம் பகுதியில் அப்துல்காதர், அண்ணாநகர் பகுதியில் முகவை க ராமர் உள்ளிட்டோர் பங்கேற்பர் என பெயர்களும் வெளியிடப்பட்டிருந்தன.

பெயர் நீக்கம்: இந்த நிலையில் நாளை மாலை சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜெயரஞ்சன் அந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் என போஸ்டர்களும், நிகழ்ச்சி நிரலும் அச்சிடப்பட்டுள்ளது. பிடிஆர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களில் அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்: இதனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென ஓரங்கட்டப்படுகிறார் என செய்திகள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து பிடிஆர் அலுவலகத்தில் கேட்ட போது அவர்கள் கூறுகையில் பொய்யான குற்றச்சாட்டுகள், புனையப்பட்ட வீடியோக்களுக்கு எதற்காக பிடிஆர் மீது கட்சியில் ஓரங்கட்டும் நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? முதல்வர் ஸ்டாலின் மே 23 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலீட்டாளர்களை சந்திக்க 10 நாட்கள் பயணம் செய்கிறார். அவருடன் பிடிஆரும் செல்கிறார். அதனால் இப்போதிலிருந்தே சில ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து பிடிஆர் விடுவிக்கப்பட்டாரே தவிர நீக்கப்பட்டார் என கூறுவதெல்லாம் தவறு. மேலும் ஆடியோ விவகாரத்திற்காக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications