அமைச்சர் காந்தி ஏன் இப்படி கதறி அழுகிறார்..! வைரல் வீடியோவின் பின்னணி!
வேலூர்: வேலூரில் மழையால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்ற கைத்தறி துறை அமைச்சர் ஆர் காந்தி கதறி அழும் வீடியோ வைரலாகியுள்ளது. பின்னர் அமைச்சரை உடனிருந்தவர்கள் தேற்றினார்கள்.
Recommended Video
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேரணாம்பட்டு பகுதியில் அஜித்தா தெருவில் உள்ள இரண்டு குடும்பத்தினர் நேற்று முன்தினம் மழை பெய்த காரணத்தினால் அருகிலிருந்த ஒரு மாடிவீட்டில் தங்கியுள்ளனர்.
தொடர் மழையால் நேற்று காலை கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

குடியாத்தம் மருத்துவமனை
மீட்கப்பட்டவர்கள் பேரணாம்பட்டு, குடியாத்தம், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி சென்றார். அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் உடலை பார்த்து அவருக்கு துக்கம் தாளவில்லை.

கதறி அழுத அமைச்சர்
இதனால் கதறி கதறி அழுதார். அப்போது உடனிருந்தவர்கள் அமைச்சரை தேற்றியதுடன், அப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர் காந்தி, அண்மையில் கொட்டும் மழையில் இருளர் இன மக்களிடம் கோரிக்கைகளை பெற்றதோடு அவர்களுடன் அமர்ந்து மதிய உணவை உட்கொண்டார்.

தமிழகம்
பின்னர் அவர்களுடன் செல்பி புகைப்படத்தை எடுத்துக் கொண்டார். கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும நிரம்பி வழிகிறது. மழை வெள்ளம் தேங்காது என நினைத்த இடங்களில் எல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளது.

வெள்ளப்பெருக்கு
வேலூர், ராணிப்பேட்டை, குடியாத்தம், ஆம்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டுகள் கழித்து பெரும்பாலான நீர் நிலைகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் தரைமட்டமாகி , விளை நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications