உத்தரப்பிரதேசத்துக்கு ஒரு டிக்கெட்! உதயநிதி ஸ்டாலினை முந்திய அமைச்சர் மகன்! அகிலேஷுக்கு ஆறுதல்!
சென்னை: முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை முந்தியிருக்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் பிரபு.
முலாயம் சிங் யாதவின் உடல் அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் தான் உதயநிதி ஸ்டாலின் அங்கு சென்றார்.
ஆனால் அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் பிரபுவோ, முலாயம் சிங் யாதவ் மறைவு செய்தியறிந்த சில மணி நேரங்களில் உத்திரப்பிரதேசத்துக்கு பிளைட் ஏறிச் சென்று அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

யாதவர் சமுதாயம்
அமைச்சர் ராஜகண்ணப்பனை பொறுத்தவரை யாதவர் சமுதாய மக்கள் மத்தியில் தனக்கென தனிப்பெரும் செல்வாக்கு கொண்டவர். அதிமுகவிலிருந்து வெளியேறிய பிறகு திமுகவில் இணைவதற்கு முன் சில காலம் தனியாக யாதவர் சமுதாய அமைப்பு நடத்தியவர். அப்போது அகில இந்திய அளவில் அவரது தொடர்புகள், நட்புகள் பரந்து விரிந்தன. அந்த வகையில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் அறிமுகமும் அவருக்கு கிடைத்தது.

தேர்தல் பணி
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது முதுகுளத்தூர் தொகுதியில் முகாமிட்டு தனது தந்தை ராஜகண்ணப்பன் வெற்றிக்காக வியூகங்கள் வகுத்தது பிரபு தான் என்பது திரும்பிப் பார்க்கத்தக்கது. தற்போது அவர் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் கூட கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் தவறாமல் ஆஜராகி வருகிறார். சிவகங்கை, ராமநாதபுரம், சென்னை, நெல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் பயணத்தில் பிசியாக இருக்கும் தருணங்களில், அவர் சார்பில் கட்சியினர் இல்ல விழாக்களில் கலந்துகொள்கிறார்.

யாதவர்கள் மகாசபை
அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகனை போலவே, தமிழகத்திலிருந்து யாதவர் மகாசபை அமைப்புகளை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலரும் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து முலாயம் மறைவுக்கு ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Click it and Unblock the Notifications