ஏரிக்கரையில.. குடையுடன் முதல்வர் நிற்பது தெரிந்துதான் ஸ்டாலின் அப்படி செய்தார்.. ராஜேந்திரபாலாஜி நச்
முக ஸ்டாலினை மீண்டும் விமர்சித்து பேசியுள்ளார் ராஜேந்திர பாலாஜி
சென்னை: "மழை வருது, புயல் வருது, வெள்ளம் வருதுன்னு தெரியுது இல்லை? அதுக்கு தேவையான நடவடிக்கைகளை ஸ்டாலின் முதல்லயே எடுக்கணும் இல்லை? ஆனால், முதல்வர் செம்பரம்பாக்கம் ஏரியில், அணைக்கட்டில் கொட்டும் மழையில் நனைஞ்சிக்கிட்டு நிக்கிறார் என்று தெரிந்ததும், ஓடோடி சென்று பார்வையிடுவது சேவை கிடையாது" என்று திமுக தலைவரை மறுபடியும் சீண்டி வம்பிழுத்து பேட்டி தந்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, புயல் வெள்ள பாதிப்பில் தமிழக அரசு செய்த நடவடிக்கைகள் குறித்து சிலாகித்து பேசினார்.. ஆனால், அப்போதும் மறக்காமல் முக ஸ்டாலினை விமர்சித்துவிட்டுதான் நகர்ந்தார்.

அப்போது அவர் பேசியதாவது: "ஆவின் பால் புயல் பாதித்த பகுதிக்கு தங்கு தடையின்றி கிடைத்துள்ளது... ஆவின் பாலை வெள்ளம் பாதித்த பகுதிகளில் எல்லாருக்கும் விநியோகித்து வருகிறோம்.
அதனால் புயலைப் பொறுத்தமட்டில் வரும் முன் காப்போம் என்ற முறையில் எடப்பாடியார் எடுத்திருக்கும் நடவடிக்கை எல்லாரும் பாராட்டுகிறார்கள். தானே குடையை பிடித்து, சொட்ட சொட்ட நனைந்து கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரியை பார்த்து மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்பாடு செய்து தரும் ஒரு முதல்வராக எடப்பாடியார் இருக்கிறார்..
ஆனால், ஸ்டாலினும் பார்வையிட வந்தார்? அவர் எப்படி வந்தார்? போர்க்கவசம்போல, பாதுகாப்பு டிரஸ்ஸூடன் வந்தார்.. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட யார் வந்தாலும் நாங்க பாராட்டதான் செய்வோம்.. ஆனால் எடப்பாடியார் களத்துக்கு போய்ட்டாரு என்று தெரிந்தவுடன், பேரிடர் நிவாரண குழுவுடன் செயல்படுகிறார் என்று தெரிந்தவுடன், பார்வையிட ஸ்டாலின் வர்றார்.. பிறரை பார்த்து வருவது சேவை இல்லை.. தானா வருவது தான் சேவை..
மழை வருது, புயல் வருது, வெள்ளம் வருதுன்னு தெரியுது இல்லை? அதுக்கு தேவையான நடவடிக்கைகளை முதல்லயே எடுக்கணும்.. முதல்வர் செம்பரம்பாக்கம் ஏரியில், அணைக்கட்டில் கொட்டும் மழையில் நனைஞ்சிக்கிட்டு நிக்கிறார் என்று தெரிந்ததும், ஓடோடி சென்று பார்வையிடுவது சேவை கிடையாது.
தேர்தலுக்கு இன்னைக்கு அவருக்கு தேவை இருக்கு.. அதனால போயிருக்கார். இந்த ஆட்சியின் சிறப்பை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. யார் உண்மையாக சேவை செய்கிறார்கள்? யார் நடிக்கிறார்கள் என்பதை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பதிலடியை மக்கள் தருவார்கள்" என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications