சென்னையில் ரியல் எஸ்டேட்.. அடியோடு மாறுதே.. சேகர் பாபு செய்த சிறப்பு.. சபாஷ் திட்டம்
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி வழங்கும் சேவையை சிஎம்டிஏ அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் மனை பிரிவுக்கு திட்ட அனுமதி பெற்ற அந்தந்த ஊராட்சிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ளவர்கள் சிஎம்டிஏவில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் ஆராயந்து குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும்.

பூங்காவிற்கு இடம் ஒதுக்க வேண்டும். அரசின் திட்டங்களை நிறைவேற்ற கட்டிங்கள் கட்ட இடம் ஒதுக்க வேண்டும். சாலையின் அகலம் இவ்வளவு இருக்க வேண்டும் என்று அந்த பகுதியின் தன்மையை பொறுத்து திட்டஅனுமதி வழங்குவார்கள். இந்நிலையில் இணையவழி மூலம் மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி பெறும் இணையவழி சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை, இணையவழி திட்ட அனுமதி பயிற்சி காணொலி ஆகியவற்றை சிஎம்டிஏ அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் 12 துறைகளின் ஒருங்கிணைந்த தடையில்லா சான்றிதழ் மற்றும் வீடு, மனை வாங்குவோருக்கான விழிப்புணர்வு சித்திர கதைகள் குறித்த கையேட்டையும் அவர் வெளியிட்டார்.
அப்போது அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் "சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இன்று (நவ 17) முதல் இணையவழி மூலம் பெறப்படும். பின்னர் அதனை பரிசீலனை செய்து திட்ட அனுமதி வழங்கப்படும். ஒற்றை சாளர முறையில் இணையவழி திட்ட அனுமதி மென்பொருளை உருவாக்கி மே மாதம் 2022-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் இணையதளம் மூலம் 1,179 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 820 விண்ணப்பங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது திட்ட அனுமதி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது முதல் திட்ட அனுமதி வழங்குவது வரை முற்றிலுமாக ஆன்லைன் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி வழங்குவதையும் செயல்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஆன்லைன் தளத்தையும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குனரகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள் இயக்ககம் ஆகியவற்றை இணைத்துள்ளோம்.
இதேபோல, பொதுப்பணித்துறை, சென்னை மெட்ரோ ரயில் உள்ளிட்ட 12 துறைகள் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை மக்களிடையே விண்ணப்பதாரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டுமே செயல்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது" இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications