"முதல்வர் ஸ்டாலின் தூங்கவே இல்லை!" அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு! அமைச்சர் சேகர்பாபு பேச்சு
சென்னை: சென்னையில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில், இன்று பெரும்பாலான இடங்களில் நீர் வடிந்துவிட்டதாகத் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, இரவு முழுக்க முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுறுத்தி வந்ததாகத் தெரிவித்தார்.
சென்னையில் நேற்றைய தினம் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று மாலை தொடங்கிய கனமழை, இரவு வரை கொட்டித் தீர்த்து. இதனால் பல இடங்களில் நீர் தேங்கியது.

இருப்பினும், வெள்ள நீரை அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஈடுபட்டனர். இன்று காலை பல இடங்களில் தேங்கிய மழை நீர் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சேகர்பாபு: அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரவே களத்திற்கு வந்த நிலையில், பணிகளை அவர்கள் கண்காணித்தனர். இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "வடசென்னையில் 3 முதல் 6 வரையிலான மண்டலங்களில் கொசஸ்தலை மழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ. 2450 கோடி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த பழைய கால்வாய்கள் இடிக்கப்பட்டு, அதிக நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அகலம் அதிகரிக்கப்பட்டது. மேலும், புதிதாகவும் கட்டப்பட்டன. இதற்காக ரூ. 1450 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
வடசென்னை: அதிலும் வடசென்னையில் இருக்கும் முக்கிய கால்வாய்கள்- கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், கொடுங்கையூர் இனைப்பு கால்வாய் போன்ற இடங்களில் ஆகாயத் தாமரையை அகற்றும் பணிகள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாகவே 15 செமீ மழை பெய்தும் கூட பிரகாசம் சாலை, வால்டாஸ் சாலை, பேப்பர் மில்ஸ் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சிறு அளவு கூட மழைநீர் தேங்கவில்லை.
இந்த மழையால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து அங்குள்ள தண்ணீரை அகற்ற வேண்டும்.. அங்கு மின்சாரம், உணவு போன்ற அத்தியாவசியப் பணிகளைக் கவனிக்குமாறு இன்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எங்களிடம் எடுத்துக் கூறினார். பாதிக்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்து அங்கேயே முகாமிட்டு அங்கு நோய்ப் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் கவனிக்கவும் மருத்துவ முகாம்களை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைப்பதை உறுதி செய்யக் கூறியுள்ளார்.

மீட்புப் பணிகள்: வரும் டிச. 2 முதல் 4 வரையிலான நாட்களில் கனமழை கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் முதல்வர் உத்தரவின்படி தாழ்வான பகுதிகளில் தங்கியிருப்போரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஒரு பக்கம், நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒரு பக்கம், திமுக நிர்வாகிகள் ஒரு பக்கம் என்று போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, எப்படியொரு பெருமழை வந்தாலும் அதைச் சமாளிக்கச் சென்னை மாநகராட்சி தயாராக இருக்கிறது.
முதல்வர் தூங்கவே இல்லை: ஒன்றை நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவெல்லாம் தூங்கவே இல்லை. செல்போன் மூலம் எங்களைத் தொடர்பு கொண்டு களத்திலிருந்த எங்களைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டே இருந்தார். மக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனுக்குடன் தீர்வுகாண அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்.
இதே இடத்திற்கு 2021 டிசம்பரில் முதல்வர் வந்த போது இடுப்பு அளவுக்குத் தண்ணீர் இருந்தது. ஆனால், இன்று ஒரு துளி நீர் கூட இல்லை. இதற்கு முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் தான் ஒரே காரணம். சென்னை மக்களைக் காக்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். எந்தவொரு பெருமழை வந்தாலும் அதை சமாளித்து சென்னை மக்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications