டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்த தமிழக அரசு..!
சென்னை : தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதல் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை சார்பில் மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது.

மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை
துறை தொடர்பாக பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துப் பேசினார். முன்னதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில்," 2020 - 2021 ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிபேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த வருவாய்
ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி ஆகியவைகள் மூலம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கிறது. 2003-04 ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் 3639.93 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. இந்நிலையில் 19 ஆண்டுகளில் இந்த வருவாய் ரூ.36 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,013.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2200 கோடி கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது. 2020-21ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.33,811.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது." என கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
இந்நிலையில் சட்டப்பேரவையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதல் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 24,805 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ரூ.16.67 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 6715 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரம் விற்பனையாளர்கள், 3,900 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24,800 க்கும் அதிகமான பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதம் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications