ரூ.15 லட்சம் வங்கியில் போடறதா சொன்னாரே ஒருத்தர், வட்டியோட போடசொல்லுங்க: எடப்பாடியிடம் சீறிய அமைச்சர்
மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை விவகாரம் தொடர்பாக இபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்
சென்னை: மகளிருக்கான ரூ.1,000 உதவித்தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் நீடித்திருந்தன. எதிர்பார்த்ததை போல பல்வேறு துறைகளுக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மிக முக்கியமாக தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளதாக நிதியமைச்சர் கூறினார். கடந்த 2021ம் ஆண்டு திமுக புதியதாக ஆட்சிப்பொறுப்பேற்ற போது அப்போதிருந்த மிகப்பெரிய சவால் இந்த வருவாய் பற்றாக்குறைதான்.
அப்போது இந்த பற்றாக்குறை ரூ.65 ஆயிரம் கோடியாக இருந்தது. இது குறைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இதனை தமிழ்நாடு அரசு தற்போது ரூ.30 ஆயிரமாக குறைத்திருக்கிறது. அதேபோல இந்த எதிர்பார்ப்புகளில் மகளிருக்கான உரிமைத் தொகையும் ஒன்று. எதிர்பார்த்ததைப்போலவே பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பும் வெளியானது. இது தொடர்பாக பிடிஆர் கூறுகையில், "தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

கடன்
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்தபோதே அதிமுகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "விலைவாசி உயர்வு மற்றும் கல்வி துறையில் ஏற்பட்ட பின்னடைவை கண்டித்துத்தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். திமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்ற 23 மாதங்களில் இதுவரை சுமார் 1.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இருப்பினும் இந்த கடன் போதாது என்று மேலும் 91 ஆயிரம் கோடி ரூபாயை கடன் வாங்கியுள்ளனர்.

வரி வருவாய்
இவ்வளவு கடன் வாங்கினாலும், அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. மட்டுமல்லாது வரி வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். ஆனாலும் வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடி நீடிக்கிறது. சொல்லப்போனால் இந்த பற்றாக்குறையே வந்திருக்கக்கூடாது. இது தவிர மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது.

முழுமையாக படிக்க வேண்டும்
ஆனால் இப்போது 'தகுதியான' குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மட்டும்தான் உரிமைத்தொகை என்று கூறியுள்ளனர். இது ஒரு ஏமாற்று வேலை. அனைத்து தரப்பினருக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதாவது, "இந்த நிதிநிலை அறிக்கை அனைவருக்குமானது எனபதை எடப்பாடி பழனிசாமி முழுமையாக படித்து புரிந்துகொள்ள வேண்டும்.

பட்ஜெட்
கஞ்சா, லஞ்சம் போன்ற வழக்குகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட யாருடைய ஆட்சியில் சிக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை முதலமைச்சர் இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறார்" என்று கூறினார். இதனையடுத்து மகளிர் உரிமைத்தொகை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தகுதிவாய்ந்த பெண்கள் யார் யார் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். இந்த பட்ஜெட் 6 மாத காலத்திற்குதான் இதன் பின்னர் அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications