உங்கள் பகுதியில் மின் தடையா? உடனடியாக இதை செய்யுங்கள்! சொல்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடைக் காலத்தில் மின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மின் வினியோகம் மற்றும் மின் தடை உள்ளிட்டவை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரத்தில் பேசிய திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மின் வினியோகம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்களும் இது தொடர்பான துணை கேள்விகளை எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் பதில் அளித்தார்.

 அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த கேள்விகளுக்குப் பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "இலவச மின் இணைப்பிற்காக விவசாயிகள் காத்திருந்த காலம் முடிந்துவிட்டது. இப்போது அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இதில் ஒரு லட்சம் ஆவது விவசாயிக்கு முதல்வர் வரும் 16ஆம் தேதி ஆணை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் ஒரு லட்சம் விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

கோடை காலம்

கோடை காலம்

கோடைக் காலத்தில் வழக்கமாக மின் நுகர்வு அதிகரிக்கும். இதற்குத் தேவையான ஆலோசனை நடத்தி உள்ளோம். இதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கும் பணிகளையும் தொடங்கி உள்ளோம். நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி குறையக் கூடாது என்பதற்காக சுமார் 4.80 லட்சம் டன் நிலக்கரி கோரி டெண்டர் விடப்பட்டு உள்ளது. வரும் காலத்தில் உயரும் மின் தேவையைக் கணக்கில் கொண்டு தமிழகம் முழுவதும் 216 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. கடந்த மார்ச் 29ஆம் தேதி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 17196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

 இதை செய்யுங்கள்

இதை செய்யுங்கள்

அதேபோல ஆங்காங்கே ஏற்படும் மின் வினியோக பிரச்சினையைச் சீர் செய்யும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள். மின் வினியோகம் குறித்து சமூக வலைத்தளங்களில் மின்சார வாரியத்தை டேக் செய்யும் போது, உங்கள் இணைப்பு எண்ணையும் சேர்த்துப் பதிவிடுங்கள். அப்போது தான் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

மின் சப்ளை

மின் சப்ளை

மாநிலத்தில் தற்போது பராமரிப்புப் பணிகள் காரணமாகவே மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது, மற்றபடி சீரான மின் வினியோகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் மின் வினியோகம் நிறுத்தும் சூழல் இல்லை. இதற்காக முதலமைச்சர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளார். அதேபோல மின்வாரிய செலவினங்களைக் குறைக்கப்பட்டு அதன் மூலம் ரூ 2,200 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+