டாஸ்மாக் வருமானம் கிடுகிடு! கல்லாபெட்டி நிரம்பியது! கடந்த ஆண்டை விட ரூ.2,200 கோடி கூடுதல் வருவாய்!
சென்னை: டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டை விட ரூ.2,200 கோடி அதிகரித்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் வருமானம் கடந்தாண்டு ரூ.33,811 கோடி என்றளவில் இருந்த நிலையில், நடப்பாண்டு அதாவது மார்ச் வரை மட்டும் ரூ.36,013 கோடி அதிகரித்துள்ளது.
பாமக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில், மதுவின் மூலம் அரசுக்கு வருவாய் இவ்வளவு கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது.
இதனிடையே மதுவிலக்கு மட்டும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ள மேலும் சில தகவல்கள் விவரம் வருமாறு;

மது விற்காத நாட்கள்
தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தி தினம், திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், வடலூர் இராமலிங்கர் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே தினம் ஆகிய எட்டு நாட்கள் மது விற்பனை இல்லாத நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, முக்கிய நிகழ்வுகளின் நாட்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்புடைய நாட்கள் ஆகியவையும் மது விற்பனையில்லாத நாட்களாக அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன.

2,825 மதுபானக் கடைகள்
திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதற்கு வாய்ப்புள்ள, நகர மற்றும் கிராம பஞ்சாயத்துப் பகுதிகளில் செயல்படும் 2,825 மதுபானக் கடைகளில் பணப் பாதுகாப்பு பெட்டகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த பணப் பாதுகாப்பு பெட்டகங்கள் ஒவ்வொன்றும் 300 கிலோவிற்கு மேல் எடை கொண்டவை மற்றும் பிற கருவிகளால் பழுது ஏற்படுத்த இயலாதவை ஆகும்.

பணப் பாதுகாப்பு
பணப் பாதுகாப்பு பெட்டகங்கள் மதுபானக் கடைகளின் தரையில் பதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பின்புறமும், மேல் பகுதியிலும், வலது மற்றும் இடது என இரண்டு பக்கங்களிலும் பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளன. கடைப் பணியாளர்கள் விற்பனை செய்த தொகையினை விற்பனை நேரம் முடிந்த பிறகு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த பணப் பாதுகாப்பு பெட்டகம் உதவுகிறது.

டாஸ்மாக் வருமானம்
டாஸ்மாக் வருமானம் கடந்தாண்டு ரூ.33,811 கோடி என்றளவில் இருந்த நிலையில், நடப்பாண்டு அதாவது மார்ச் வரை மட்டும் ரூ.36,013 கோடி அதிகரித்துள்ளது. அண்மையில் மதுபான விலைகள் உயர்த்தப்பட்டது இந்த வருவாய் அதிகரிப்புக்கான காரணமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications