ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எந்த புகாரும் வரவில்லை.. அமைச்சர் சிவசங்கர் தகவல்!
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து இன்று ஒரே நாளில் மாலை வரை 1.33 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28 முதல் 30 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 11,176 பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் தொடங்கியது. அன்றைய தினம் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளும் 369 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இவ்வாறு இயக்கப்பட்ட 2,461 பேருந்துகளில் 1 லட்சத்து 10,475 பயணிகள் பயணித்திருந்தனர். நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் தொடங்கியது. அன்றைய தினம் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளும் 369 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இவ்வாறு இயக்கப்பட்ட 2,461 பேருந்துகளில் 1 லட்சத்து 10,475 பயணிகள் பயணித்திருந்தனர்.
இன்று சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். நாளை முதல் 4 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் இன்று மாலை ஊர்களுக்குப் புறப்பட்டனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து முனைத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பேருந்துகளில் ஏறி, அவற்றில் அமர்ந்திருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் சிவசங்கர். எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள், எங்கு செல்கிறீர்கள், அரசின் ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன என பயணிகளிடம் விசாரித்தார் அமைச்சர் சிவசங்கர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "சிறப்பு பேருந்துகள் மூலம் நேற்று முன்தினம் ஒரு லட்சத்து 10 பயணிகள் பயணம் செய்தனர். நேற்றைய தினம் 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பயணம் செய்திருந்தனர் இன்றைய தினம் மாலை வரை 1 லட்சத்தை 33 ஆயிரத்து 925 பேர் பயணம் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்து 41 ஆயிரத்து 838 பேர் பயணம் செய்துள்ளனர்.
இரவு 12 மணி வரை இன்னும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தேவையான அளவுக்கு அனைத்து பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழக்கமாக இயங்குகிற பாதையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகள் இயக்குவது எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அரசு கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றன. மக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக பயணம் செய்து வருகிறார்கள். அரசுப் பேருந்துகளில் கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் பேர் அதிகமாக முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எந்த புகாரும் வரவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications