அடிதூள்! அரசு பஸ் பயணிகளுக்கு வந்த சூப்பர் நியூஸ்! அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
சென்னை: பொது மக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கி வைத்துள்ளார். மேலும், பொது இணையதளம் ஒன்றையும் அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுக்க பேருந்துகள் இயக்கப்படுகிறது. நகர் பேருந்துகள் தொடங்கி நகரங்களுக்கு இடையேயான சொகுசு பேருந்துகள், ஏசி பேருந்துகள் எனப் பல வகை பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இருப்பினும், அரசு பேருந்துகளில் சிக்கல்கள் இருப்பதாகவும் இது தொடர்பாகப் புகார் அளிக்கக் கூட எந்தவொரு வழியும் இல்லை என்றும் மக்கள் கூறி வருகின்றனர். இதனிடையே இதில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில், பொதுமக்களுக்குச் சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்யவும் பொதுமக்கள் எதிர்பார்ப்புகளைக் கண்டறியவும், அவர்களின் குறைகள் மற்றும் புகார்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் உதவி மையம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு சட்டசபையிலேயே போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த உதவி மையம் இலவசமாக இருக்கும் என்றும் அரசு பேருந்துகள் குறித்து எந்தவொரு புகார்களையும் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இலவச எண்
இந்தச் சூழலில் இது தொடர்பான இலவச எண்ணை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி இனி பொதுமக்கள் 1800 599 1500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை அளிக்கலாம். இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் அழைப்புக் கட்டணம் எதுவும் இல்லை. பொதுமக்கள் இலவசமாகவே தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும், தகவல்களைப் பெறலாம். இந்த அழைப்புகளைப் பெறுவதற்கான எனச் சென்னை பல்லவன் இல்லத்தில் அமைந்திருக்கும் மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் தனியாக உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எந்த தகவல்கள்
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் குறைகள் பதிவு செய்யப்பட்டு, தனியாகப் பிரத்தியேக அடையாள எண் ஒதுக்கப்படும். இது தொடர்பாகப் புகார் அளித்தவருக்கு எஸ்எம்எஸும் அனுப்பப்படும். இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அது குறித்த தகவல்களும் பயணிகளுக்குத் தெரியப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். பேருந்துகள் குறித்த தகவல்கள் மட்டுமின்றி, விபத்துகள், வெள்ளம், கலவரங்கள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும். பண்டிகை கால பேருந்துகள் இயக்கம் குறித்தும் இதில் தொடர்பு கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள்
அதேபோல மாற்றுத்திறனாளிகள் புகார் குறைகளைத் தெரிவிக்க ஏதுவாக கூகுள் குரல் உதவி மூலம் இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்து இயக்கத்தில் பயணிகளின் திருப்தியை மேலும் அதிகரிக்க முடியும். இதேபோல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பொது இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் நேரம், மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

புது தளம்
அதேபோல பொதுமக்கள் தங்கள் புகார் மற்றும் குறைகளையும் இதில் தெரிவிக்கலாம். அதற்கான வசதியும் இந்த இந்த இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து வருகை மற்றும் இயக்க நேரம் குறித்த விவரங்கள், வழித்தட தகவல்களையும் பயணிகள் இதில் அறிந்து கொள்ள உரிய வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை பேருந்து செயலியை மூலம் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளின் தகவல்களைத் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம்
அதேபோல, தளவழிப் பதிவு திட்டத்தின் (ஓ.டி.ஆர்.எஸ்) வழியாக முன்பதிவு செய்வதற்கும், திருவிழாக்கால சிறப்புப் பேருந்து இயக்கம் குறித்த தகவல்களும் இந்த தளத்திலும் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக் கழகத்தின் இந்த இணையதளத்தை அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்படுத்த ஏதுவாக ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது.. http://www.arasubus.tn.gov.in என்ற முகவரில் சென்று பயணிகள் தேவையான தகவல்களைப் பெற முடியும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications