இதனால்தான் சிக்கல்.. இனிமேல் இப்படி தப்பு நடக்காம பார்த்துக்குறோம்: பிரஸ் மீட்டில் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை : தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது ஒரு தகவல் தொடர்பு இடைவெளியால் ஏற்பட்டது. இனிமேல் இப்படியான தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்க வீரர்களை தேர்வு செய்து அனுப்பாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போட்டிகளில் பங்கேற்க 247 மாணவர்களை அனுப்புமாறு லக்னோவில் இருந்து விளையாட்டு குழுமம் சார்பில் கடந்த மே மாதம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள உடற்கல்வி முதன்மை ஆய்வாளருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அதனை பள்ளிக்கல்வித்துறை கவனிக்காமல் விட்டதால் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க இயலவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டு மாணவர்கள் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோனதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.
தனது நிர்வாகத் திறமையின்மையால் விளையாட்டுத் துறையில் தமிழக மாணவர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்பை கிடைக்கவிடாமல் செய்துள்ளது திமுக அரசு, இதற்கு காரணமான பள்ளி கல்வித்துறை அமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சரும் இனிவரும் காலங்களிலாவது தங்கள் துறை சார்ந்த பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று சென்னை அண்ணா சதுக்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் இந்த விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், "தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது பற்றிய விவகாரத்தில் தீர விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தகவல் தொடர்பு இடைவெளியால் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்த விளையாட்டு போட்டிகள் நடக்கவில்லை.
வீடியோ கான்பிரன்ஸ் மீட்டிங்கில் அரசு அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டார்கள். காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் இப்படியான தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications