நண்பர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. அளப்பரிய மகிழ்ச்சி.. அமைச்சர் வேலுமணி
சென்னை: வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறும் ரஜினிகாந்துக்கு அமைச்சர் வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவாவில் நவ.20 முதல் 28 வரை 50ஆவது சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழாவில் ரஜினிக்கு திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அந்த விருதுக்கு ஐகான் ஆப் தி கோல்டன் ஜூபிளி என பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து ரஜினிகாந்துக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிக்கு வழங்கப்படுவதை மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்தார்.
இதையடுத்து ரஜினிகாந்தும் தனக்கு அறிவிக்கப்பட்ட விருது குறித்து மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். ரஜினிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், தமிழ் திரையுலக பிரபலங்கள் என பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அமைச்சர் வேலுமணியும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறுகையில் இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக அருமை நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை மத்திய அரசு அறிவித்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக அருமை நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை மத்திய அரசு அறிவித்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.@rajinikanth
— SP Velumani (@SPVelumanicbe) November 2, 2019












Click it and Unblock the Notifications