தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 1821 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    காற்றில் பறந்த சமூக இடைவெளி... அத்தியாவசிய பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்

    செய்தியாளர்கள் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சுகாதாரத் துறை சார்பாக நடத்தப்படும் செய்தியாளர்கள் சந்திப்பு இரண்டு மூன்று நாட்களாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இதையடுத்து இன்று கொரோனா குறித்த அப்டேட்டுகளை வழங்க அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில் இதுவரை 1240 ஆண்களும், 581 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 7,707 ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இது வரை 80,110 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

    38 பேர் ஆண்கள்

    38 பேர் ஆண்கள்

    இன்று 7,131 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 72,965 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. வீட்டு கண்காணிப்பில் 27,277 பேர் உள்ளனர். அது போல் அரசு கண்காணிப்பில் 25 பேர் உள்ளனர். இன்று 94 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 66 பேரில் 38 பேர் ஆண்கள், பெண்கள் 28 பேர் ஆவர்.

    இறப்பு

    இறப்பு

    இன்று மட்டும் தமிழகத்தில் 94 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 960 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 52 சதவீதமாகியுள்ளது. இன்று ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதை அடுத்து இதுவரை தமிழகத்தில் உயிரிந்தோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. குரோம்பேட்டை மருத்துவமனையில் நேற்று இரவு 10.15 மணிக்கு 34 வயது ஆண் இறந்தார்.

    வீடு திரும்பியோர்

    வீடு திரும்பியோர்

    தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் 835 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரூர் மருத்துவமனையிலிருந்து22 பேரும், கோவை மருத்துவமனையிலிருந்து 14 பேரும் வேலூர் மருத்துவமனையிலிருந்து 17 பேரும் ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து 9 பேரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையிலிருந்து 7 பேரும் சேலம். தூத்துக்குடி மருத்துவமனையிலிருந்து தலா 2 பேரும் தஞ்சை, நெல்லை மருத்துவமனையிலிருந்து தலா ஒருவரும் ராஜா முத்தையா மருத்துவமனையிலிருந்து 3 பேரும், தனியார் மருத்துவமனைகளிலிருந்து இருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

    அதிகரிப்பு

    அதிகரிப்பு

    சென்னையில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சோதனையை அதிகரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் இனி நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை நடத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+