உடுக்கை சத்தத்தை கேட்டதுமே அம்மன் கோயில் நடை தானாய் திறந்த அதிசயம்! பரவசத்தில் பக்தர்கள்! ஆச்சரியம்
சென்னை: தீபாவளியையொட்டி 3 ஆயிரம் அடி மலை உச்சியில் உள்ள தேவிரம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வின் வீடியோக்களும், போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது.. இந்த தேவரம்மன் கோவிலின் சிறப்பு என்ன தெரியுமா?
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மல்லேனஹள்ளி அருகே உள்ளது பிண்டுகா என்ற கிராமம்.. இங்கு பிரபலமான தேவிரம்மன் கோவில் அமைந்துள்ளது...

சிறப்பு பூஜை
இந்த கிராமத்தின் அருகே பெரிய மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் உள்ள இந்த மலையின் உச்சியில் தேவிரம்மன் சிலை அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கமாகும்..
தேவிரம்மனை தரிசனம் செய்ய வரும் வெளிமாநில பக்தர்களுக்கு ஏதுவாக கர்நாடக அரசு சார்பில் சிக்கமகளூருவில் இருந்து பிண்டுகாவுக்கு ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதும் வாடிக்கையாகும்.
ஒவ்வொரு தீபாவளியின்போதும், மலையின் அடிவாரத்தில் உள்ள தேவிரம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படும்.
தேவிரம்மன் அம்மனுக்கு பூஜை
அதுபோலவே, மலையில் உள்ள தேவிரம்மன் சிலைக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்படும்.. இந்த தேவிரம்மனை தரிசனம் செய்ய கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செய்வார்கள்.. இதனால் தீபாவளி நேரத்தில் அந்த மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படும்..
இதற்காக மலை உச்சியில் உள்ள தேவிரம்மனை தரிசிக்க கூட்டம், கூட்டமாக பக்தர்கள் மலையேறி 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள தேவிரம்மன் சிலை பகுதிக்கு வந்தடைவார்கள்.
உடுக்கை அடித்து அலங்காரம்
ஆனால், மலை மீதுள்ள இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு எளிதில் அனுமதி கிடைக்காது. இதற்காக பக்தர்கள் கரடுமுரடான பாதைகளில் 2 நாட்கள் மலையேறி வருவார்கள்.. அதன்பின்பு தேவிரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும்..
இந்த சிறப்பு அலங்காரம் செய்யும்போது, எப்போதுமே அம்மன் சிலை திரையால் மூடப்படும்.. அலங்காரம் முடிவடைந்ததும் அம்மனை பார்க்க பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.. அப்போது வேத, மந்திரங்கள் முழங்க உடுக்கை அடிப்பார்கள். அப்போது கோவில் நடை தானாக திறக்கும். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டதுமே பக்தர்கள் சிலிர்த்து போவார்கள். இதன்பிறகு மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்..
கயிறு பிடித்து மலையேறினர்
அந்தவகையில், இந்த வருடமும் தீபாவளியையொட்டி திருவிழா களைகட்டியது.. கடந்த 19, 20ம் தேதிகளில் மலை உச்சியில் உள்ள அம்மனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, பக்தர்கள் மலை உச்சிக்கு ஏறி வந்து அம்மனை தரிசித்தார்கள்.
தற்போது தொடர் மழை பெய்து வருவதால், மலைப்பகுதிகளில் பக்தர்களால் ஏறி செல்வது சிரமமாகவே இருந்தது.. சில இடங்களில் மழையால் அபாயகரமாகவும் காட்சி அளித்தது. அந்த பகுதிகளில் கயிற்றை பிடித்து மலையேறி செல்ல வழிவகை செய்யப்பட்டிருந்தது.
உடுக்கை சத்தம் கேட்டதுமே திறந்த திரை
பிறகு கோவில் நடை சாத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் ஆரம்பமானது.. அப்போது பம்பை உடுக்கை அடிக்கப்பட்டது.. உடனே கோவில் நடை தானாக திறக்கப்பட்டது. காற்றின் அசைவால் மூடப்பட்டிருந்த திரை தானாக திறந்ததுமே பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆர்ப்பரித்தார்கள்.. அலங்காரத்தில் காட்சி தந்த அம்மனை தரிசனம் செய்தார்கள்..
பிறகு மாலையில் தேவிரம்மனின் பல்லக்கு ஊர்வலமும் நடந்தது. இன்றையதினம் தீமிதி திருவிழாவும் நடக்க போகிறது.. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்த தயாராகி வருகிறார்கள்..
இந்த திருவிழாவுக்கு அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்துள்ளார்கள்..
எனினும், 3 பேர் மலை மீது ஏற முடியாமல் மயக்கம் அடைந்திருக்கிறார்கள்.. ஒருவருக்கு கீழே விழுந்து கால் முறிந்துள்ளது.. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications