சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கவனத்துக்கு.. கூடுதல் விமானங்கள் அறிவிப்பு... புக்கிங் நாளை தொடக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் பிரச்சனை காரணமாக மார்ச் 25ம் தேதி நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டது இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அடியோடு ரத்து செய்யப்பட்டன.

mission vande bharat update : additional evacuation flights, booking start from tomorrow

இதனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். வந்தேபாரத் மிஷன் தி்ட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி விமானம் மூலம் இந்தியர்களை அழைத்து வருகிறது. மேலும் கப்பற்படைக் கப்பல்கள் மூலமாக வெளிநாடுகளில் சி்க்கிய இந்தியர்களை மத்திய அரசு அழைத்து வருகிறது.

முதற்கட்ட வந்தே பாரத் மிஷன் தி்ட்டம் கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மூலம் அமெரிக்கா, பிலி்ப்பைன்ஸ், வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் 64 விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்

மாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து.. கலெக்டர்கள் யோசனை.. மருத்துவ குழுவுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை மாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து.. கலெக்டர்கள் யோசனை.. மருத்துவ குழுவுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை

2-வது கட்ட வந்தேபாரத் மிஷன் திட்டம் மே 16-ம் தேதி தொடங்கிய நிலையில் ஜுன் 13-ம் தேதி வரை நடக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 32 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.தற்போதைய நிலையில் மேலும் 67 ஆயிரம் இந்தியர்களை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. அதவாது ஒட்டுமொத்தமாக ஒருலட்சம் இந்தியர்களை அழைத்துவர மத்திய அரசு முடிவு முடிவு செய்துள்ளது.

mission vande bharat update : additional evacuation flights, booking start from tomorrow

Recommended Video

    சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு | Oneindia Tamil

    ஜூன் 4-ம் தேதி டெல்லி - ஆக்லாந்து (நியூசிலாந்து) இடையே விமானம் இயக்கப்பட உள்ளது. இதேபோல், ஜூன் 5-ம் தேதி டெல்லியில் இருந்து சிகாகோ மற்றும் ஸ்டாக்ஹோம், நியூயார்க், பிராங்பகர்ட் , சியோல் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படவுள்ளன. இதேபோல் மும்பையில் இருந்து நியூவார்க், லண்டன் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான விமான டிக்கெட் புக்கிங் ஏர் இந்தியா இணையதளத்தில் மே 30-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

    English summary
    air india will be operating the following additional flights and more under the mission vande bharat. booking will start from 11000hrs ist 3oth may 2020
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X