செக்யூரிட்டி வேலைக்கு ஆள் எடுப்பதை விட மோசம்! அக்னிபாத் திட்டம் வேண்டாம்! தமிமுன் அன்சாரி எதிர்ப்பு!
சென்னை: செக்யூரிட்டி வேலைக்கு ஆள் எடுப்பதை விட மோசமானது அக்னிபாத் திட்டம் என. மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார்.
இதில் இணைபவர்களின் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே பணி நிரந்தர வாய்ப்புள்ளது எனும் போது, மீதி 75 சதவீதம் பேரின் எதிர்காலம் என்னவாகும்? என வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அக்னிபாத் திட்டம்
இந்திய ராணுவத்தின் முப்படைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டம் கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. நான்காண்டு கால பணிக்காக மட்டும் முப்படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

கலவரங்கள்
வட மாநிலங்களில் கலவரங்களும், ரயில் எரிப்புகளும் நடைபெறுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் பரவுவதாக தகவல்கள் வருகின்றன. பல இடங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 17 வயது நிரம்பிய 21 வயதுக்குட்பட்ட இரு பாலர்களும் இத்திட்டத்தில் இணையலாம் என்றும், 4 ஆண்டுகள் ராணுவ சேவையாற்றிய பிறகு இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இறுதியாக அவர்களுக்கு 12 லட்சம் வரையிலான நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூலிக்கு ஆள்
இது தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு கூலிக்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை விட மோசமானதாக உள்ளது. மேலும், இது மதிப்புமிக்க இந்திய ராணுவத்தின் கண்ணியத்தை பாழ்படுத்தும் செயலாகவும் இருக்கிறது. இந்திய ராணுவத்தில் அதிகரித்து வரும் ராணுவ செலவுகளை கட்டுப்படுத்துவதும், ஒய்வுதிய செலவுகளை குறைப்பதும்தான் இதற்கு காரணம் என்று இதற்கு விளக்கமளிக்கப்படுகிறது.

பலனற்ற திட்டம்
ஆனால் இதில் சாதாரண நிலையில் 15 ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு பெறும் ராணுவ வீரர்களின் நலன்கள் பலி கொடுக்கப்படுகின்றன என்பது தான் உண்மையாகும். இவற்றை கடந்து இன்னொரு கோணத்திலும் இத்திட்டம் பலனற்றதாகவே தெரிகிறது. அதாவது, ராணுவத்தின் சகல நுட்பங்களையும் கற்று முழுமை பெறுவதற்கு குறைந்தது 6 முதல் 8 ஆண்டுகள் ஆகும் என பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், இந்த 4 ஆண்டு கால பணி என்பது முழுமையற்றது என்பதும், பயனற்றது என்பதும் தெரிய வருகிறது.

75% பேர் கதி?
இதில் இணைபவர்களின் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே பணி நிரந்தர வாய்ப்புள்ளது எனும் போது, மீதி 75 சதவீதம் பேரின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கேள்வியும் எழுகிறது. இவர்களில் பலர் சந்தர்ப்ப சூழலில் தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களால் பயன்படுத்தப்படும் அபாயமும் இருக்கிறது. முக்கியமாக காவி வலதுசாரி தீவிரவாத அமைப்புகளின் சூழ்ச்சிக்கு பலியாகும் ஆபத்தும் இருக்கிறது.

காவி மயமாக்க
ராணுவத்தை காவி மயமாக்க வேண்டும் என்ற முழக்கம் சமீப காலமாக உரக்க கேட்டு வரும் நிலையில், நமது ஐயமும், அச்சமும் வலிமை பெறுகிறது. மேலும் படையில் சேரும் காலத்தில், அவர்களின் உயர்கல்வி வாய்ப்பு இயல்பாகவே இழக்கப்படும் நிலையில், படையில் பணி நிரந்தரமற்ற நிலையும் உருவாவது பெரும் சமூக சீரழிவையே உருவாக்கும்.இதில் OBC மற்றும் பட்டியலினங்களை சேர்ந்தவர்களே பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

திரும்பப்பெறுக
இத்திட்டம் எல்லா வகையிலும் நாட்டின் நலன்களுக்கு எதிராகவே உள்ளது என்பது மட்டுமல்ல, ஆபத்தானதும் ஆகும். எனவே சமூகநீதி, நாட்டின் எதிர்கால நலன், பொது அமைதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications