Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்மணிகளே கவலை வேணாம்.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கேன்! போதை குறித்து மாணவர்களுக்கு அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்கள் போதைக்கு அடிமையாகக்கூடாது என்றும், மற்ற மாணவர்களை போதைக்கு அடிமையாக விடக்கூடாது எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற "சிற்பி" நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "சிறார் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை இன்று சிறப்பான கவனத்தைச் செலுத்திக் கொண்டு வருகிறது. சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபட குடும்ப உறுப்பினர்களோட கவனக் குறைவு. போதிய குடும்ப வருமானம் இல்லாமை, ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவை காரணமாக இருக்கிறது.

 MK Stalin advice students about Liquor, Alcohol addiction

இவற்றைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க இது போன்ற திட்டங்கள் கைகொடுக்கும். போதை பொருள் ஒழிப்பு, குடிப்பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பெறச் செய்தல், அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா அமைப்புக்களுடன் தொடர்பினை ஏற்படுத்துதல், சுய ஆளுமை திறனை மேம்படுத்துதல், பெற்றோர்களது பேச்சை மதித்து நடத்தல், பொது மக்களோடு தொடர்பு, இளம் வயதிலிருந்து போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க செய்தல், தேசிய விழாக்களை கொண்டாடுதல், தேசிய சின்னங்களுக்கு மரியாதை செய்தல், மாநிலத்தின் செழுமை மற்றும் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளச் செய்தல் ஆகிய பண்புகளை சிறுவர்களிடையே உருவாக்க வேண்டும்.

ஏனென்றால், இன்றைய இளைஞர்களே, நாளைய எதிர்காலம்!இளைஞர்களை சீர்படுத்தினாலே, எதிர்காலத்தை சீர்படுத்த முடியும். அப்படி உருவாகக்கூடிய இளைஞர்கள் சிறந்த சமுதாயத்தை நிச்சயமாக செதுக்குவார்கள். தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இன்றைக்கு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்திற்கு முன்னேறுவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு சிறப்பாக செய்து கொண்டு வருகிறது.

என்னைப் பொறுத்தவரை, மாணவர்களை தரமான மனிதர்களாக' உருவாக்குதே அரசாங்கத்தின் கடமையாக நான் கருதுகிறேன். இதில் முக்கியமாக "நான் முதல்வன்" என்ற திட்டம் தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அனைத்துத் திறமைகளும் கொண்டவர்களாக வளர்க்கின்ற திட்டமாக இது அமைந்திருக்கிறது.

இதனுடைய பயன், தலைமுறை தலைமுறைக்கு நிச்சயமாக தொடரும். 100 விழுக்காடு படிப்பறிவு என்பதை நாம் நிச்சயம் எட்டியாக வேண்டும். அனைவருக்கும் கல்வியைக் கொடுத்தாக வேண்டும். இடையில் நின்றுவிடும் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்குள் அழைத்து வர முயற்சிக்க வேண்டும்.

 MK Stalin advice students about Liquor, Alcohol addiction

அதிலும் குறிப்பாக. கற்றல் குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண் கொண்டவர்களாக மாற்ற வேண்டும். குழந்தைகளை தன்னம்பிக்கை இங்கே வந்திருக்கின்ற உங்களிடம் நான் வைக்கின்ற வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். பள்ளியோடு கல்வியை நிறுத்திடாமல் எல்லோரும் கல்லூரிகளுக்கு போகவேண்டும்.

நீங்கக் எதை பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள்! நன்றாக விளையாடி உடலை உறுதி செய்யுங்கள்! சமூகத்தைப் படியுங்கள்! அந்தக் கல்வியின் மூலமாக பகுத்தறிவையும், சுயமரியாதையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்! அறிவியல் மனப்பான்மைய வளர்த்துக் கொள்ளுங்கள்! அந்தப் படிப்பை வைத்து சிந்தியுங்கள்! புதிய புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்துங்கள்! படிப்பு மட்டும்தான் உங்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாத சொத்து!

உங்களுடைய படிப்பையும் திறமையும் பார்த்து, பெரிய பெரிய கம்பெனிகள் உங்களை அழைத்து வேலை கொடுக்க வேண்டும். நீங்களும் தொழில் தொடங்கி, நிறைய பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். உங்களோட மற்ற கவலைகளை போக்குவதற்கு மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது.

இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினான நான் இருக்கேன்! நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. படிக்கின்ற காலத்தில் உங்களுக்கு வேறு எதிலும் கவனச் சிதறல்கள் இருக்கக் கூடாது.

இன்றைக்கு போதை ஒழிப்பு நாள்! அதனால் கேட்டுக்கொள்ள விரும்புவது. எந்தவிதமான போதைப் பழக்கத்திற்கும் நீங்களும் அடிமையாகக் கூடாது. உங்கள் நண்பர்களையும் அடிமையாக விடாதீர்கள். இன்றைக்கு உலக போதை ஒழிப்பு நாள்! உங்களை சுத்தியிருகிறவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டியது "போதை என்பது உங்கள் உடலுக்கு மட்டுமல்ல.

உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல. நாட்டிற்கும். எதிர்காலத்திற்கும் அது மிக. மிக கேடு! அதனை புறந்தள்ளி போதையற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும்." இதைத்தான் நீங்கள் எல்லோருக்கும் சொல்லவேண்டும். சொல்லுவீர்களா... சொல்லுங்க சொல்லுவீர்களா.. எல்லோருக்கும்?

அன்புச் செல்வங்களே. அன்பு மாணவ கண்மணிகளே. நீங்கள் நல்லவர்களாக. வல்லவர்களாக, நம்பிக்கைக் நீதியில், உறுதி கொண்டவர்களாக திகழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!கொண்டவர்களாக, நேர்மையில் ஆல் தி வெரி பெஸ்ட்! நன்றி! வணக்கம்!" என்று தெரிவித்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+