வசந்தகுமார் விரைவில் வீடு திரும்புவார் என நம்பினேன்.. கொரோனா பிரித்துவிட்டதே.. ஸ்டாலின் உருக்கம்
சென்னை: கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன்! இன்முகம்- பழகுவதற்கு இனியர்; கடின உழைப்பாலும் சலியாத முயற்சியாலும் சாதித்துக் காட்டிய வெற்றியாளர்!

காங்கிரஸ் கட்சியினருக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த ஆறுதலும் அனுதாபமும்! அவருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்குமான பாசப் பிணைப்பை நேரில் கண்டு வியந்திருக்கிறேன், அனைத்துக் கட்சித் தொண்டர்களின் அன்பையும் பெற்றவராகத் திகழ்ந்தார்.
கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன்!
— M.K.Stalin (@mkstalin) August 28, 2020
இன்முகம்- பழகுவதற்கு இனியர்; கடின உழைப்பாலும் சலியாத முயற்சியாலும் சாதித்துக் காட்டிய வெற்றியாளர்!
காங்கிரஸ் கட்சியினருக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த ஆறுதலும் அனுதாபமும்! pic.twitter.com/o4E9sgQh8X
விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை பொய்த்தது. கொரோனா அநியாயமாகப் பிரித்துச் சென்றுவிட்டது. வசந்த் அண்ட் கோ என்ற நிறுவனத்தை கடின உழைப்பால் உருவாக்கி முன்னுதாரணமாக விளங்கியவர். கன்னியாகுமரி எம்பி ஆக நாங்குநேரி எம்எல்ஏவாக மக்கள் எளிதில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்.
பொது வாழ்விற்கு இலக்கணமாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த அவரின் மறைவு, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. வசந்தகுமாரின் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications